மணமணக்கும் இஞ்சி சிக்கன் ரெசிபி செய்வது எப்படி ?

Summary: வார கடைசி நாட்கள் இருக்கிறோம். போதும் பெரும்பாலான வீடுகளில் சிக்கன் குழம்பு சிக்கன் கிரேவி என வைத்து சாப்பிடுவார்கள் ஆனால் எப்போதும் போல் ஒரே மாதிரியான சிக்கன் ரெசிபிகளை செய்வதற்கு பதில் நீங்கள் விதவிதமான சிக்கன் ரெசிபிகளை செய்து பார்க்கலாம் அதில் ஒரு ரெசிபி பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம். நீங்கள் இந்த இஞ்சி சிக்கனை இது போன்ற உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் மேலும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு காரசாரமான சுவையில் அற்புதமாக இருக்கும்.

Ingredients:

  • 1 KG சிக்கன்
  • 10 பச்சைமிளகாய்
  • ½ கப் நறுக்கிய இஞ்சி
  • 1 பெரிய வெங்காயம்
  • 6 பல் பூண்டு
  • 1 tbsp உப்பு
  • 2 மேசை கரண்டி எண்ணெய்
  • 3 மேசை கரண்டி எண்ணெய்
  • 2 பெரிய வெங்காயம்
  • தக்காளி பேஸ்ட்
  • மசாலாவில் ஊற வைத்து வதக்கிய சிக்கன்
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 2 tbsp தனியா தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • ½ tbsp உப்பு
  • 2 கீரிய பச்சை மிளகாய்
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் சிக்கனை மசாலாவில் ஊற வைப்பதற்காக மசாலா செய்ய முதலில் பச்சை மிளகாயை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் அரைத்துக் கொள்ளுங்கள், பின்பு அரை கப் நறுக்கிய இஞ்சியை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் அரைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு வெங்காய மற்றும் பூண்டு பற்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு பெரிய பவுளில் நாம் சுத்தப்படுத்திய சிக்கனை சேர்த்து அதில் நாம் மிக்ஸியில் அரைத்த
  3. பச்சை மிளகாய் பேஸ்ட், வெங்காய பேஸ்ட், இஞ்சி பேஸ்ட் அனைத்தையும் சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு ஒரு மணி நேரங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  4. பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும். நாம் ஊறவைத்த சிக்கனை சேர்த்து சிக்கன் நிறம் மாறும் வரை பத்து நிமிடம் வேகவைத்து இறக்கி விடுங்கள்.
  5. பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும் பின் எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும்.
  6. இதனோடு இரண்டு தக்காளியில் அரைத்த தக்காளி பேஸ்ட் சேர்த்துக் கொள்ளவும். நாம் சேர்த்து தக்காளி பேஸ்ட் நன்கு வதங்கியதும் இதனோடு மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  7. பின் நாம் சேர்த்த பொருட்கள் நன்கு வதங்கியதும், பின் நாம் வேக வைத்த சிக்கனை இதனோடு சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கவும். பின் இதனுடன் அரை டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  8. பின் சிக்கனில் இருந்து வரும் தண்ணீர் வற்றி வரும் வரை வறுவலாக வதக்கவும். பின் கீறிய பச்சை மிளகாய், கொத்தமல்லி தூவி ஒரு நிமிடம் வதக்கி இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான இஞ்சி சிக்கன் இனிதே தயாராகிவிட்டது.