மணமணக்கும் ஜெய்ப்பூர் சிக்கன் கிரேவி செய்வது எப்படி ?

Summary: நீங்கள் எப்பொழுதும் போல் சிக்கன் வாங்கி ஒரே மாதிரியான குழம்பு, கிரேவி, வறுவல் என செய்வதற்கு பதில் அவ்வப்பொழுது இது போன்று மாறுதலாக சிக்கன் ரெசிபிகளையும் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட பரிமாறினால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கும் இந்த ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கன் ரெசிபி மிகவும் பிடித்து போய்விடும். அடுத்த முறை உங்களையும் இது போல் செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள் அந்த அளவிற்கு ஒரு அட்டகாசமான சுவையில் இந்த சிக்கன் ரெசிபி இருக்கும்.

Ingredients:

  • ½ KG சிக்கன்
  • 1 tsp மிளகாய் பொடி
  • ½ tsp மிளகு பொடி
  • ½ tsp சீரக பொடி
  • ½ tsp உப்பு
  • 1 tbsp தயிர்
  • ½ பழம் எலுமிச்சை சாறு
  • 1 tbsp மல்லி
  • ½ tsp மிளகு
  • ½ tsp சீரகம்
  • 3 பச்சை மிளகாய்
  • கொத்தமல்லி
  • 1 tbsp தயிர்
  • 3 tbsp எண்ணெய்
  • 2 பட்டை
  • 3 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • கடல் பாசி
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 2 பச்சை மிளகாய்
  • 1 வெங்காயம்
  • அரைத்த மசாலா
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1 tsp மிளகாய் தூள்
  • பொரித்த சிக்கன்
  • தண்ணீர்
  • ½ tsp  கரம் மசாலா
  • கஸ்தூரி மேத்தி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் சுத்தப்படுத்தி வைத்துக் கொண்ட சிக்கனை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் மிளகாய் பொடி, மிளகுப் பொடி, சீரகப்பொடி, உப்பு, தயிர் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின் மசாலா அரைக்க ஒரு மிக்ஸி ஜாரில் மல்லி, மிளகு, சீரகம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, தயிர் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தீயை விதமாக எரிய விட்டு.
  3. பின் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு மணி நேரம் ஊற வைத்த சிக்கனை சேர்த்து, நிறம் மாறும் வரை பொரித்து பின் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  4. பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கடல் பாசி, பிரியாணி இலை போன்ற பொருட்களை சேர்த்து ஐந்து வினாடி கிளறிவிட்டு.
  5. பின் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போகி வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன்.
  6. நாம் அரைத்த மசாலாவை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் போன்ற பொருட்களை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கியவுடன்.
  7. இதனுடன் நாம் பொரித்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து ஒரு பத்து நிமிடம் வதக்கி கொள்ளுங்கள். பின் கடைசியாக இனுடன் கரம் மசாலா மற்றும் சிறிதளவு கஸ்தூரி மேத்தி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி விட்டு இறக்கி கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கன் இனிதே தயாராகிவிட்டது.