நாவில் எச்சி ஊறும் சின்ன வெங்காயத் தொக்கு செய்வது எப்படி ?

Summary: உங்களுக்கு இட்லி, தோசைக்கு வித்தியாசமான, அதே சமயம் ஈஸியானா ஒரு சைடிஷ் செய்ய வேண்டுமா? வீட்டில் சின்ன வெங்காயம் இருத்தல் ஒரு சுவையான மற்றும் எளிமையான முறையில் சைடிஸ் செய்யலாம்.அது தான் சின்ன வெங்காய தொக்கு இது இட்லி, தோசை, மட்டுமின்றி சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.

Ingredients:

  • 1 கப் தோலுரித்த சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 4 பல் பூண்டு
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • ½ டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் தோல் சீவி துருவிய இஞ்சி
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  2. பிறகு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சேர்த்து வதக்கி இறக்கவும்.
  3. குறிப்பு: சின்ன வெங்காயத்தை விழுதாகவும் அரைத்தும் சேர்க்கலாம். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  4. இதை பிரெட் மீது தடவி சாப்பிடலாம், தோசை, சபதியுடனும் பரிமாறலாம். சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம்.