ரசம் | Rasam

Summary: வீட்டிலேயே சுவையான ரசம் செய்ய எளிய, எளிதான செய்முறை. ரசம் நம் அன்றாட உணவு பழக்கத்தில் மிகவும் அடிப்படையான அத்தியாவசியமான உணவாகும். ரசத்தை  சூப்பாகவும் பரிமாறலாம்.

Ingredients:

  • ¼ டேபிள் ஸ்பூன் வெந்தயம்`
  • ½ டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 1 சிவப்பு மிளகாய்
  • 2 tbsp எண்ணெய்
  • 3 தக்காளி
  • 2 சிவப்பு மிளகாய்
  • 2 கப் தண்ணீர்
  • தேவைகேற்ப உப்பு
  • சிறிதளவு புளி
  • 1 டேபிள் ஸ்பூன் கடுகு
  • சிறிதளவு கருவேப்பிலை
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • கொஞ்சம் நறுக்கியது கொத்தமல்லி
  • 4 பூண்டு

Steps:

  1. ஒரு கடாயில் குறைந்த தீயில் ¼ டேபிள் ஸ்பூன்  வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
  2. 1/2 டேபிள் ஸ்பூன்  சீரகம் மற்றும் ஒரு  சிவப்பு மிளகாயை சேர்க்கவும்.
  3. அவற்றை குளிர்வித்து மிக்சியில் அரைக்கவும். நன்றாக அறைந்த பிறகு அதை ஒரு தனி பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
  4. சூடான பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன்  எண்ணெய் சேர்க்கவும்.எண்ணெய் சூடானதும் 1 டேபிள் ஸ்பூன் கடுகு, பாதியாக உடைத்த சிவப்பு மிளகாய் இரண்டு , 1½ டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்க்கவும்.
  5. மூன்று முதல் நான்கு நறுக்கிய பூண்டு, ஒரு துளிர் கருவேப்பிலை மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கவும். இலைகள் மிருதுவாக மாறும் வரை நன்றாக வதக்கவும்.
  6. வதங்கிய பின்பு  நறுக்கிய அல்லது பிசைந்த தக்காளியை   அதனுடன் சேர்க்கவும்.  தேவைக்கேற்ப உப்பு மற்றும் அரை ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூலை அதனுடன் சேர்க்கவும்.
  7. அதன்  பிறகு  அவற்றை மூடி வைத்து வேகவிடவும் அல்லது தக்காளி மென்மையாக மாறும்வரை வதக்கவும்.
  8. பின்னர் நாம் ஏற்கனவே (step 1) அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை இதனுடன் கலக்கவும். அதன் பிறகு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வதக்கவும்.
  9. அதில் இரண்டு முதல் மூன்று கப் அளவிற்கு தண்ணிர் சேர்க்கவும்.
  10. அதனுடன்  சிறிதளவு புளி தண்ணிர் சேர்க்கவும். குறைவாக இருந்தாலும் சரி ஆனால் புளி தண்ணீரை அதிகமாக சேர்க்க வேண்டாம்.
  11. அவற்றை நன்றாக 5 நிமிடம் கொதிக்கவிடவும். குறைந்த தீயில் கொதிக்க வைத்தால் நல்ல சுவையாக இருக்கும்.
  12. கொதித்த பின் அவற்றை சிறிது எடுத்து சுவைப்பார்க்கவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு, புளி  சேர்க்கலாம்.
  13. அதில் தண்டுகளுடன் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத்   தூவி விட வேண்டும்.