இட்லி தோசைக்கு ஏற்ற மாங்காய் சட்னி செய்வது எப்படி ?

Summary: தினமும் காலையில் தோசை, இட்லி செய்து அதற்கு சைடிஷ் என்ன செய்யலாம் என்று யோசனையாகவே இருக்கும். தினமும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, போன்றவற்றை செய்து செய்து சலித்து விடும். அதனால் ஒரு முறை இந்த மாங்காய் சட்னி செய்து ருசித்து வீடுகள் அவ்வளவு சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும்.

Ingredients:

  • 1 மாங்காய்
  • ½ கிண்ணம் தேங்காய் துருவல்
  • 8 மிளகாய் வற்றல்
  • 1 தேக்கரண்டி பெருங்காயப்பொடி
  • உப்பு
  • 1 தேக்கரண்டி கடுகு
  • ½ ஸ்பூன் எண்ணெய்
  • கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் தேங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
  2. பிறகு மிக்சியில் மாங்காய் துருவல், தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.
  3. அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, கருவேப்பிலை, போட்டு தாளித்து பிறகு அதை அரைத்த மாங்காய் சட்னியில் சேர்த்து பரிமாறவும்.
  4. இப்பொழுது சத்தான சுவையான மாங்காய் சட்னி ரெடி.