பாய் வீட்டு சுவையான ஆட்டுக்கால் பெப்பர் பாயா எப்படி செய்வது ?

Summary: பொதுவாக காலை மற்றும் இரவு நேரங்களில் செய்யும் டிபன் வகை உணவுகளுக்கு வழக்கம்போல் சாம்பார் சட்னி என செய்து சாப்பிடுவதற்கு பதில் இதுபோன்ற ஒரு முறை இந்த பாய் வீட்டு ஆட்டுக்கால் பெப்பர் பாயா செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுங்கள் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுபவர்கள். அடுத்த முறையும் இதே போல் செய்ய சொல்லி உங்களை தொந்தரவு செய்வார்கள். இந்த ஆட்டுக்கால் பெப்பர் பாயா அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும்

Ingredients:

  • 2 ஆட்டுக்கால்
  • 2 tbsp எண்ணெய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 4 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 2 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 tsp மிளகாய் தூள்
  • 1 tsp தனியா தூள்
  • 1/2 tsp மஞ்சள் தூள்
  • 4 tsp மிளகு தூள்
  • 2 கப் தேங்காய் பால்
  • உப்பு
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் வாங்கி வைத்திருக்கும் ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். அதன் பின்பு நாம் வைத்திருக்கும் காய்கறிகளை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அதன் பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நாம் நறுக்கிய வெங்காயம் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் வெங்காயம கண்ணாடி பதத்திற்கு வதக்கியதும்.
  3. நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விடவும் பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் இதனுடன் ஆட்டுக்காலை சேர்த்து வதக்கவும்.
  4. பின் இதனுடன் நாம் வைத்திருக்கும் அரை ஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு ஸ்பூன் தனியாத்தூள் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போன்றவற்றை சேர்த்து பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்
  5. அதன் பின் குக்கரை முடி வைத்து பத்து விசில் வரும் வரை வேக வைத்து இறக்கி கொள்ளவும். அதன் பின் குக்கர் மூடியைத் திறந்து பிரஷரை ரீலிஸ் செய்து கால் வெந்தவுடன்.
  6. இதனுடன் இரண்டு கப் அளவு தேங்காய்பால் ஊற்றி பின் 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். பின் இறக்கும் முன் நான்கு ஸபூன மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். அவ்வளவு தானா சுவையான பெப்பர் பாயா தயார்.