மெட்ரஸ் பிரியாணி கத்தரிக்காய் ரெசிபி செய்வது எப்படி ?

Summary: பொதுவாக யாரிடம் உங்களுக்கு பிடித்த உணவு எது என்று கேட்டாலும் சற்றும் யோசிக்காமல் யாராக இருந்தாலும் பிரியாணி என்று தான் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு பிரியாணியை அனைவரும் ரசித்து, ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் நாம் செய்யும் பிரியாணிக்கு உடன் வைத்து சாப்பிடுவதற்கு பெரும்பாலான நபர்கள் கத்திரிக்காயை பெரிதும் விரும்புவார்கள். ஆகையால் இதுபோன்ற ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இதன் சுவை அற்புதமாக இருக்கும்

Ingredients:

  • 2 tbsp வேர்கடலை
  • ¼ tsp வெந்தயம்
  • 1 tbsp எள்
  • 3 tbsp நல்லெண்ணெய்
  • 5 கத்தரிக்காய்
  • 1 tsp கடுகு
  • 1 tsp சீரகம்
  • 1 tsp மிளகு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • ½  tnsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 tsp மிளகாய் தூள்
  • 1 tsp தனியா தூள்
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1 தக்காளி பொடியாக நறுக்கியது
  • 1 கப் புளி கரைசல்
  • அரைத்த பொடி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயில் வேர்க்கடலை, வெந்தயம் மற்றும் எள் போன்ற பொருட்களை சேர்த்து எண்ணெய் இல்லாமல் வறுத்துக் கொள்ளுங்கள். பின் வறுத்தப் பொருட்களை குளிர வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
  2. பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் நீள் வாக்கில் நறுக்கிய கத்திரிக்காய் துண்டுகளை சேர்த்து நான்கு வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
  3. பின்பு கடாயில் மீதும் இருக்கும் எண்ணெயில் கடுகு, சீரகம், மிளகு போன்ற பொருட்களை சேர்த்து ஐந்து வினாடிகள் வறுத்து. பின் இதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  4. பின்பு இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போகி வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன். இதனுடன் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  5. பின் மசாலாவாடை போனபின் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கும் மசிந்து வந்ததும். இதனுடன் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடுங்கள் பின் புளி கரைசல் ஒரு கொதி வந்ததும்.
  6. பின் இதனுடன் கத்திரிக்காய் மற்றும் அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி விட்டு ஐந்து நிமிடம் வதக்கி கடாயை இறக்கி கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான மெட்ராஸ் பிரியாணி கத்தரிக்காய் இனிதே தயாராகிவிட்டது.