சுவையான பச்சை பட்டாணி பராத்தா செய்வது எப்படி ?

Summary: நீங்கள் வழக்கமாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என எப்பொழுதும் ஒரே மாதிரியான வகையில் டிபன் செய்யாமல் இது போன்று ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பச்சை பட்டாணி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டுமென்று கேட்டு வாங்கி சாப்பாடு சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த பச்சை பட்டாணி பராத்தா அட்டகாசமான சுவையில் இருக்கும் அடுத்த முறையும் இது போல் செய்ய சொல்லி உங்களிடம் சொல்லுவார்கள்.

Ingredients:

  • 1  கப் கோதுமை மாவு
  • 1 கப் பச்சை பட்டாணி
  • 1 பச்சை மிளகாய்
  • 1 tbsp தயிர்
  • 1 tsp எண்ணெய்
  • உப்பு
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் ஒரு கப் அளவு பச்சைப் பட்டாணி எடுத்து கொண்டு தண்ணீரில் நன்கு ஊற வைத்து பின் ஊற வைத்த பச்சை பட்டாணியை நன்கு வேக வைத்து கொள்ளுங்கள்.
  2. அதன் பின் வேக வைத்த பச்சை பட்டாணியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பெரிய பவுளில் ஒரு கப் அளவு கோதுமை மாவு எடுத்து கொள்ளவும்.
  3. பின் கோதுமை மாவுடன் நாம் மிக்ஸியில் அரைத்த பட்டாணி விழுது சேர்த்து கலந்து கொள்ளவும். பின் இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், பெடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. பின் இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின் இதனுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  5. பின் மாவை 15 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து பின் ஆறு பெரிய உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். பின் உருண்டையை பூரி கட்டையில் வைத்து மென்மையாக தேய்த்து கொள்ளுங்கள்.
  6. அதன் பின் வழக்கம் போல் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கல் சூடானதும் நாம் தேய்த்த பச்சை பட்டாணி பராத்தாவை கல்லில் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான பச்சை பட்டாணி பராத்தா தயாராகிவிட்டது.