மதுரை மண் வாசனையுடன் மட்டன் குழம்பு செய்வது எப்படி ?

Summary: தூங்கா நகரம் மதுரையின் மட்டன் குழம்பு பிரபலமானது என்று சொல்லலாம். இப்படி ஒரு நாள் உங்கள் வீட்டில் மட்டன் குழம்பு வைத்துப் பாருங்கள் இந்த சுவை உங்கள் வீட்டில் உள்ள சிறிய குழந்தைகளிலிருந்து பெரியோர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக மாறிவிடும். மறுமுறையும் இதே போல் செய்யும்படி உங்களிடம் கேட்கும் படியாக இருக்கும். இன்று மதுரை மண் வாசனையுடன் மட்டன் குழம்பு செய்வது எப்படி, தேவையான பொருட்கள் மற்றும் செய்வது என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 2 tbsp சீரகம்
  • 2 tbsp கசகசா
  • 5 சின்னவெங்காயம்
  • ½ KG மட்டன்
  • 2 tbsp எண்ணெய்
  • ½ கப் தேங்காய் பால்
  • 2 தக்காளி
  • 2 குழிக்கரண்டி குழம்பு மசலா
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு
  • கொத்தமல்லி
  • எண்ணெய்
  • ½ tbsp சோம்பு
  • 6 சின்ன வெங்காயம்
  • கருவேப்பிலை

Equipemnts:

  • 1 அம்மிஇல்லாத பட்சத்தில் மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் குழம்புக்கு தேவையான ரகசிய மசாலா அரைக்க வேண்டும். உங்களுக்கு மதுரை மண் வாசனை உடன் ருசியான மட்டன் குழம்பு வர வேண்டும் என்றால் அம்மியில் மசாலா அரைத்து கொள்ளுங்கள்.
  2. முதலில் சிறிது நீர் ஊற்றி அம்மியை சுத்தம் செய்து கொள்ளுங்கள் பின் கசகசா சீரகம் இரண்டையும் அம்மியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள் பின்பு நாம் வைத்திருக்கும் 5 சின்ன வெங்காயத்தை அம்மியில் வைத்து தட்டி நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
  3. பின்பு கறியை இரண்டு முறை தண்ணீரில் நன்கு அலசி எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
  4. தக்காளி வதங்கிய பின் குழம்பு மசாலா பொடி, நம்ம அம்மியில் அரைத்த மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட் அனைத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
  5. பின் கறியை இதனுடன் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விட்டு ஐந்து விசில் வரும் வரை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து விசில் வந்தவுடன் குக்கரின் பிரஷர் ரிலீஸ் செய்து கொள்ளுங்கள்.
  6. பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் போட்டு தாளிக்க வேண்டும். பின் குக்கரில் உள்ள குழம்பை கடாயில் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.
  7. பின்பு மட்டன் குழம்பு நன்கு கொதித்து போது நம்ம வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றிக் கொள்ளுங்கள் ஒரு நிமிடம் மிதமான தீயில் அடுப்பில் வைத்து கொள்ளவும்.
  8. அதன் பின்பு கடாயை இறக்கி விடுங்கள் அடுத்து நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை சிறிதாக தூவி விடுங்கள் அவ்வளவுதான் மதுரை மண்வாசனை அளிக்கும் மட்டன் குழம்பு இனிதே தயாராகிவிட்டது.