மணமணக்கும் நீலகிரி சிக்கன் குருமா செய்வது எப்படி ?

Summary: நாம் அதிகப்படியாக விரும்பும் உணவுப் பொருட்களில் அசைவ உணவுகள் தான் அதிகமாக இருக்கும். அதிலும் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில் கண்டிப்பாக அசைவம் சாப்பிடாமல் இருக்க மாட்டோம் அப்படி ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன் எடுத்து எப்பொழுதும் போல் ஒரே வகையான குழம்பை மட்டும் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். நீங்கள் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் வைக்கும் சில ஸ்டைலில் நீங்கள் சிக்கன் தயார் செய்து சாப்பிடலாம் உதாரணமாக இன்று கமகமக்கும் நீலகிரி ஸ்டைலில் சிக்கன் குருமா வைக்கலாம்.

Ingredients:

  • 1 KG சிக்கன்
  • எண்ணெய்
  • 2 பெரியவெங்காயம்
  • ½ TBSP இஞ்சி பூண்டு விழுது
  • 1 தக்காளி
  • 1 TBSP மஞ்சள் தூள்
  • 2 TBSP மிளகாய் தூள்
  • ½ TBSP கரம் மசாலா
  • ½ TBSP மல்லித்தூள்
  • 2 TBSP எலுமிச்சை சாறு
  • உப்பு
  • கொத்தமல்லி
  • ½ கப் துருவிய தேங்காய்
  • 4 பச்சை மிளகாய்
  • 6 முந்திரி
  • 1 TBSP சீரகம்
  • 1 TBSP சோம்பு
  • 1 TBSP கசகசா
  • 2 PIECE ஏலக்காய்
  • 1 PIECE பட்டை
  • 2 கொத்து புதினா
  • 3 கொத்து கொத்தமல்லி
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சொள்ளுங்கள். எண்ணெய் சூடேறியுவுடன் அதில் சீரகம் சோம்பு கசகசா ஏலக்காய் மற்றும் பட்டை இவற்றை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின் வறுத்தெடுத்த பொருட்களை ஆற வைத்து ஆரிய உடன் மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும் இதோடு தேங்காய், பச்சை மிளகாய், முந்திரி, புதினா, கொத்தமல்லி, மற்றும் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து விழுது போல் அரைத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடு ஏறியவுடன் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை.
  4. வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் அதனுடன் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து பச்சை வாடை போய் தக்காளி மெண்மையாக வரும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
  5. பின்பு இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து நன்கு கிளறி விடுங்கள் பின்பு சிறிதளவு எலுமிச்சைச் சாறு ஊற்றி நாம் வைத்திருக்கும் சிக்கன் தொண்டுகளை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
  6. பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேக வைக்கவும் பின்பு கடாயை கீழே இறக்கி சிறிதளவு கொத்தமல்லியை தூவி விடுங்கள் கமகமக்கும் நீலகிரி சிக்கன் குருமா இனிதே தயாராகி விட்டது.