மணமணக்கும் காளான் சூப் செய்வது எப்படி ?

Summary: கடைகளில் செய்யப்படும் சூப்புகளில் சுவை அதிகமாக இருப்பதற்காக பல வகையான மசாலாக்களை சேர்பார்கள். ஆகையால் உங்கள் வீட்டிலேயே சூப் தயார் செய்து சாப்பிடுங்கள் ஆம் இன்றைக்கு வீட்டிலேயே காளான் சூப் எப்படி தயார் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். பருவ மழை காலங்கள் வேறு ஆரம்பிக்கப் போகிறது ஆகையால் மழை நேரங்களில் சூடாக சாப்பிட இந்த சூப் செய்து பாருங்கள்.

Ingredients:

  • வெண்ணெய்
  • 200 கிராம் காளான்
  • 1½ tbsp மைதா
  • 2 பல் பூண்டு
  • 1 பெரிய வெங்காயம்
  • ¼ கப் பச்சை பட்டாணி
  • 2 கப் பால்
  • ¼ கப் கார்ன்
  • ¾ tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp மிளகு தூள்
  • உப்பு
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் காளான் வாங்கும் பொழுது பிரஷான காளானக உள்ளதா என்பதை பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பழைய காளானா என்பதை சரி பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.
  2. வாங்கிய காளானை இரண்டு முறை தண்ணீர் வைத்து நன்கு அலசி கொள்ளுங்கள். பின் ஒரு காளானை நான்கு பீஸ் என வெட்டி அனைத்து காளானையும் இப்படியாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. பின் காடையை அடுப்பில் வைத்து அதில் வெண்ணையை சேர்த்து கொள்ளவும். வெண்ணை உருகி சூடேறியவுடன் நறுக்கி வைத்திருக்கும் பூண்டு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பின் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
  4. வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.. வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் இதனுடன் காளானையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
  5. காளான் மென்மையாக வதங்கியதும், பின் இதனுடன் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி கொள்ளவும். அதனோடு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறி விட்டுக் கொள்ளுங்கள்.
  6. ஐந்து நிமிடம் வேக வைத்து கடாயை கீழ இறக்கி கொள்ளுங்கள். பின் காளானுடன் வதக்கிய பொருட்களை ஒரு பவுளில் எடுத்துவிட்டு மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து வெணணெய் சேர்த்து கொள்ளவும்.
  7. வெண்ணெய் சூடேறி உருகியதும் மைதா மாவையும் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கலக்கவும். மைதா மாவின் பச்சை வாடை போகும் வரை கிளறிவிட்டு பின் பாலை ஊற்றி நன்கு கிளறி விடவும்.
  8. பால் உற்றிய பிறகு கெட்டியான பதத்திற்கு வரும் வரை கிளறிவிட்டு. நாம் ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் காளானையும் இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள் பின்பு சூப்பை நன்கு கொதிக்க விட்டு கடாயை இறக்கி விடுங்கள்.
  9. பின் பொடியாக கொத்த மல்லியை வெட்டி சிறிது தூவி விடுங்கள். இப்பொழுது காளான் சூப் இனிதே தயாராகி விட்டது.