காரசாரமான வேப்பம் பூ கார குழம்பு செய்வது எப்படி ?

Summary: இன்று நாம் அதிக நபர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலான வேப்பம் பூ கார குழம்பு செய்வது பற்றி தான் பார்க்க போகிறோம். இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மதியம் சுடு சோறுடன் சேர்த்து பரிமாறினால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அதுமட்டுமில்லாமல் காய்ச்சல் வந்தவர்களுக்கு இந்த குழம்பை செய்து கொடுத்தால் உடலுக்குத் தெம்பு கூடும். வயிற்றுப் புண்னை ஆற்றும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு குழம்பாக இருக்கும் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • ½ tbsp வேப்பம் பூ
  • 4 tbsp எண்ணெய்
  • 2 கப் சின்ன வெங்காயம்
  • 4 பல் பூண்டு
  • புளி கரைசல்
  • 1 tsp மிளகாய் தூள்
  • 1 tsp சாம்பார் பொடி
  • ¼ tsp கடுகு
  • ¼ tsp வெந்தயம்
  • 2 tsp தனியா தூள்
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • ¼ tsp பெருங்காய தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தீயை குறைவாக வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அரை டேபிள் ஸ்பூன் வேப்பம் பூவை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு பாதி எலுமிச்சை அளவு புளியை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து பின் புளியை கரைத்து கெட்டியான புளி கரைசலாக கரைத்து கொள்ளுங்கள். பின் மீண்டும் கடாயை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
  3. பின் எண்ணெய் காய்ந்ததும் அதில் கால் டீ ஸ்பூன் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும், பின் கடுகு பொரிந்து வந்தவுடன் நாம் நறுக்கி வைதனதிருக்கும்இரண்டு கப் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
  4. பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் அதனுடன் நான்கு பல் பூண்டு மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் பூண்டு பற்கள் நன்கு வதங்கியதும்.
  5. பின் இதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு டீ ஸ்பூன் தனியாத் தூள், கால் டீ ஸ்பூன் பெருங்காயத் தூள், சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.
  6. பின் மசாலா வாசனை போன பின் கரைத்து வைத்திருக்கும் புளிக் கரைசலை சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின் புளி கரைசல் கொதித்து வந்ததும் நாம் வறுத்த வேப்பம்பூவைச் சேர்த்துக் ஒரு கொதிவந்ததும் கடாயை இறக்கவும். அவ்வளவு தான் சுவையான வேப்பம் பூ கார குழம்பு தயார்.