சுவையான நாட்டுபுற வெந்தய குழம்பு எப்படி செய்வது ?

Summary: சைவ குழம்பு, கிரேவி, பொரியல் மற்றும் அவியல் என சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம் உள்ளனர். அதிலும் இன்று நாம் அதிக நபர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலான நாட்டுபுற வெந்தயக் குழம்பு செய்வது பற்றி தான் பார்க்க போகிறோம். இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மதியம் சுடு சோறுடன் சேர்த்து பரிமாறினால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு குழம்பாக இருக்கும் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 tsp நல்லெண்ணெய்
  • 1 tsp கடலைப்பருப்பு
  • 1 tsp தனியா
  • ½ tsp மிளகு
  • 2 tsp வெந்தயம்
  • 8 வர மிளகாய்
  • சிறிது
  • 1 tbsp நல்லெண்ணெய்
  • ½ tsp கடுகு
  • ½ tsp வெந்தயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 15 சின்ன வெங்காயம்
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • ¼ tsp பெருங்காயதூள்
  • 3 tsp சுண்டக்காய் வத்தல்
  • 1 தக்காளி
  • அரைத்த மசாலா
  • ½ tsp வெல்லம்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் அளவு நல்லெண்ணெயை ஊற்றி ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் தனியா, அரை டீஸபூன் மிளகு சேர்த்து வறுக்கவும்.
  2. பின்பு தனியா நன்கு வறுப்பட்டு மணம் வர தொடங்கியதும் இதனுடன் எட்டு வர மிளகாய், இரண்டு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்கு வறுத்து எடுத்து நன்கு குளிர கை்கவும்.
  3. பின் வறுத்த பொருட்கள் நன்கு குளிர்ந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து கொள்ளுங்கள்.
  4. பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் இதனுடனா மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சுண்டைக்காய் வத்தலை சேர்த்து பொரித்துக் கொள்ளவும்.
  5. பின் இதனுடன் நாம் தோல் உரித்தி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து மசிந்து வரும் வரை வதக்கவும்.
  6. பின் தக்காளி நன்கு வதங்கியதும் நாம் அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு கிளறி விடவும் பின் மசாலா நன்கு வதங்கியதும் தேவையான அளவு உப்பு மற்றும் புளிக்கரைசல் ஊற்றி நன்றாகக் கொதிக்க விடுங்கள்.
  7. பின்பு குழம்பு நன்றாக கொதித்து வந்ததும் இதனுடன் சிறிது வெல்லம் சேர்த்து கடாயை இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான நாட்டுபுற வெந்தய குழம்பு இனிதே தயாராகிவிட்டது.