மதிய உணவுக்கு ஏற்ற பப்பாளி கூட்டு செய்வது எப்படி ?

Summary: சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் சாப்பிடுவதற்கு ஏதாவது கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம். இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த பப்பாளிக்காய் கூட்டு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும்.

Ingredients:

  • 2 வர மிளகாய்
  • 1 tsp சீரகம்
  • 4 tbsp துருவியது தேங்காய்
  • 1 பப்பாளிக்காய்
  • 1 கப் பாசிபருப்பு
  • ¼ tsp பெருங்காயதூள்
  • 1 tbsp எண்ணெய்
  • ½ tsp கடுகு
  • ½ tsp உளுந்தப்பருப்பு
  • உப்பு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் எடுத்து கொண்ட பப்பாளிக்காயை நன்கு தண்ணீரில் கழுவி பின் அதன் மேற்புற தோலை சீவி பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய பப்பாளிக்காய் சேர்த்து அது முழ்கும் அளவிற்கு தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து கொள்ளவும்.
  3. பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் அளவு பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறாமாக வறுத்து பின் பருப்பை குழைவாக வேகவிட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
  4. பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு வர மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம், நான்கு டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவலை சேர்த்து மையாக அரைத்து கொள்ளுங்கள்.
  5. பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அரை டீஸ்பூன் டுகு உளுந்த பருப்பு மற்றம் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்க்கவும்.
  6. பின் இதனுடன் நாம் வேக வைத்த பப்பாளிகாய் மற்றும் பருப்பபை சேர்த்து நன்கு கிளறி விட்டு இரண்டு நிமிடம் வதக்கி பின் அரைத்த தேங்காயும் சேர்த்து கடாயை மூடி ஒரு ஐந்து நிமடம் வேக வைத்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான பப்பாளிக்காய் கூட்டு தயாராகிவிட்டது