மென்மையான குதிரைவாலி ஆப்பம் செய்வது எப்படி ?

Summary: இனி நீங்கள் வீட்டிலேயே ஆப்பம் செய்து கொடுக்கலாலம் அதுவும் சுவையான குதிரைவாலி ஆப்பம் தயார் செய்யலாம். இப்படி ஒரு முறை காலை உணவாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு காலை செய்து கொடுத்து பாருங்கள் தினமும் உங்களை இந்த ஆப்பம் செய்து தர சொல்லி தொந்தரவு பன்னுவார்கள். அந்த அளவுக்கு உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆப்பம் பிடித்த உணவாக மாறிவிடும்.

Ingredients:

  • 1 கப் குதிரைவாலி
  • 1 கப் கார் அரிசி
  • ¼ கப் உளுந்து
  • 1 tbsp வெந்தயம்
  • 2 கப் துருவிய கருப்பட்டி
  • ½ கப் இளநீர்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 ஆப்ப கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் எடுத்து கொண்ட ஒரு கப் குதிரைவாலி உடன் ஒரு கப் கார் அரிசி, கால் கப் உளுந்து, ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் அனைத்தயும் ஒன்றாக சேர்த்து கொள்ளவும்.
  2. பின் இதனுடன் தண்ணீர் ஊற்று இரண்டு மூன்று முறை நன்கு அலசிக் கொள்ளுங்கள். பின் இதனுடன் மறுபடியும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. பின் அனைத்து பொருட்களும் நன்றாக ஊறியதும் ஒரு மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து மையாக அரைத்து கொள்ளுங்கள். பின் அரைத்த மாவுடன் புளித்த இளநீரை சேர்த்து கரைத்து இரவு முழுவதும் புளிக்க விடவும்.
  4. பின் ஒரு டீ பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கருப்பட்டி மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி கருப்பட்டி கரையும் வரை அடுப்பில் வைத்து இறக்கி கொள்ளுங்கள். பின் கரைத்த பாகை வடிகட்டி மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  5. பின் ஆப்ப கடாயை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் தடவி மாவை ஊற்றி மூடி வைத்து வேக விடவும். ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான குதிரைவாலி ஆப்பம் தயாராகிவிட்டது.