காரசாரமான மொச்சை கார குழம்பு செய்வது எப்படி ?

Summary: மொச்சை வைத்து ஒரு காரசாரமான கார குழம்பு செய்து சுட சுட சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் இந்த மொச்சை கார குழம்பை கிரமாத்து பகுதிகளில் வைப்பது போன்றே பக்குவமாக செய்து பார்க்க போகிறோம். இந்த குழம்பை இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு தட்டு சோறும் காலியாகும் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 tsp தனியா
  • 1 tsp மிளகு
  • ½ tsp சோம்பு
  • 1 tsp எண்ணெய்
  • ¼ கப் துருவிய தேங்காய்
  • 4 பல் பூண்டு
  • 200 கிராம் மொச்சை
  • 1 tbsp எண்ணெய்
  • ½ tsp கடுகு
  • 2 வர மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 4 பச்சை மிளகாய்
  • ¼ கிலோ சின்ன வெங்காயம்
  • 4 தக்காளி
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • ½  tbsp மிளகாய் தூள்
  • ½ கப் புளி கரைசல்
  • உப்பு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் தனியா ஒரு டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், மற்றும் அரை டீஸ்பூன் சேர்த்து வறுக்கவும்.
  2. பின் பொருட்கள் நன்கு வறுப்பட்டு மணம் வரும் போது நான்கு பல் பூண்டு மற்றும் கால் கப் தேங்காய் துருவல் சேர்த்து சிவக்க வறுத்து பின் கடாயை இறக்கி குளிர வைத்து பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல் அரைக்கவும்.
  3. அதன் பின்பு மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணய் காய்ந்ததும் அரை டீஸ்பூன் கடுகு, ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் இரண்டு வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  4. பின் இதனுடன் நான்கு கீறிய பச்சை மிளகாய், கால் கிலோ நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பின்பு தக்காளி நன்கு வெந்து மசிந்து வந்ததும் இதனுடன் நாம் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசல், உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளுங்கள்.
  6. பின் இதனுடன் நாம் வேகவைத்த 200 கிராம் மொச்சையை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பின் கொதித்து வரும் போது நாம் அரைத்த மசாலாவை சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு இறக்கவும். அவ்வளவு தான் சுவையான மொச்சை குழம்பு தயாராகிவிட்டது.