சுவையான எள்ளு புதினா சட்னி செய்வது எப்படி ?

Summary: நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி, மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த எள்ளு புதினா சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும்.

Ingredients:

  • 5 TBSP வெள்ளை எள்ளு
  • எண்ணெய்
  • 2 TBSP கடலை பருப்பு
  • 2 TBSP உளுந்த பருப்பு
  • 4 பல் பூண்டு
  • 4 பச்சை மிளகாய்
  • 4 சிவப்பு வத்தல்
  • 1 கட்டு புதினா
  • 3 தக்காளி
  • உப்பு
  • எண்ணெய்
  • ¼ TBSP கடுகு
  • ¼ TBSP உளுந்த பருப்பு
  • 1 வர மிளகாய்
  • கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெள்ளை எள்ளு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு கடாயை கீழ இறக்கி வறுத்து எடுத்த பொருட்களை ஒரு பவுலில் எடுத்து சூடு ஆறு வரை வைத்து இருங்கள். பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடேறும் வரை காத்திருக்கவும்.
  3. பின்பு பூண்டு, பச்சை மிளகாய், வர மிளகாய், சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள் பின்பு ஏற்கனவே வறுத்தெடுத்த பொருட்களுடன் இதையும் சேர்த்து ஆறவிடுங்கள் இரண்டு இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  4. பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தக்காளி மற்றும் புதினா இலையை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள் தக்காளி பச்சை வாடை போயி மென்மையாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.
  5. பின்பு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்துள்ள பொருட்களுடன் இதையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கலக்கி கொள்ளுங்கள்.
  6. பின்பு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.
  7. பின்பு நாம் தயார் செய்துள்ள சட்னியையும் இதில் ஊற்றி இரண்டு நிமிடம் நன்கு வதக்கி கொள்ளுங்கள் அவ்வளவுதான் எள்ளு புதினா சட்னி இனிதே தயாராகிவிட்டது.