பஞ்சு போன்ற மென்மையான ஒட்ஸ் இட்லி செயவது எப்படி ?

Summary: . இட்லி போன்ற உணவுகள் நம் உடலில் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகள் அதனால் நமது ஆரோக்கியமும் மேம்படும். ஏனென்றால் அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை வெறுப்பவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக புது விதமாக சுவையான இட்லி செய்து சாப்பிடலாம். ஆம், இன்று ஒட்ஸ் இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். காலை நேரங்களில் இந்த ஆரோக்கியமான சுவையான ஒட்ஸ் இட்லியை செய்து அசத்துங்கள்.

Ingredients:

  • 1 கப் ஓட்ஸ்
  • 1 கப் பார்லி
  • ½ கப் உளுந்து
  • ½ tsp வெந்தயம்
  • தண்ணீர்
  • உப்பு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 இட்லி பாத்திரம்

Steps:

  1. முதலில் ஒரு கப் பார்லி, ஒரு கப் உளுந்து மற்றும் அரை டீஸ்பூன் வெந்தயம் போன்ற பொருட்களை ஒன்றாக கலந்து இரண்டு மூன்று முறை நன்கு அலசி கொள்ளுங்கள்.
  2. பின் அலசிய பொருட்களை ஓரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  3. பின் ஊற வைத்த பொருட்களை அரைப்பதற்கு பத்தி நிமிடம் முன்னர் ஒரு கப் அளவு ஓட்ஸ் எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்வும்.
  4. அதன் பின் ஓட்ஸ் சிறிது நேரம் தண்ணீரில் ஊறியதுக் அனைத்து பொருட்களையும் கிரைண்டர் அலலது மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்து பின் உப்பு சேர்த்து நன்றாக கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  5. மாவு புளித்து வந்ததும் வழக்கம் போல் இட்லி ஊற்றி எடுத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் தோசை மாவுக்கு கரைத்து தோசை தயார் செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான ஒட்ஸ் இட்லி தயார்.