வாயில் வைத்தவுடன் கரையும் ஆப்பிள் அல்வா செய்வது எப்படி ?

Summary: அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது தித்திக்கும் சுவையில் ஆப்பிள் அல்வா. இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ஆப்பிள் அல்வாவை செய்து கொடுத்தால்அனைவரும் விரும்பி சாம்பிடுவார்கள். அதனால் இன்று இந்த தித்திக்கும் சுவையுடன் ஆப்பிள் அல்வா செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 2 ஆப்பிள்
  • 4 tbsp சர்க்கரை
  • 5 tbsp நெய்
  • 1 கப் கோதுமை மாவு
  • 10 முந்திரி பருப்பு
  • ½ சிட்டிகை கேசரி பவுடர்
  • 1 சிட்டிகை ஏலக்காய் தூள்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் எடுத்து கொண்ட ஆப்பிளை நன்றாக கழுவி துடைத்து தோல் சீவி துருவிக் கொள்ளவும். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றவும்.
  2. பின் நெய் உருகி நன்றாக காயந்ததும் அதில் முந்திரிப் பருப்பை சேர்த்து பொன்னிறாமாக வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். பின் அதே கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸபூன் நெய் ஊற்றி.
  3. பின் நெய் காய்ந்ததும் அதில் கோதுமை மாவு மற்றும் ஆப்பிள் துருவலை சேர்த்து பின் தீயை மிதமாக ஏரிய விட்டு வேகும் வரை நன்கு கிளறவும். பின் முக்கால் வாசி வெந்ததும்.
  4. மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய், கேசரிப் கலர், சர்க்கரை, இரண்டையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு பின் ஏலக்காய் தூள் சேர்த்து. பின் கடாயில் ஒட்டாமல் அல்வா பதம் வரை நன்கு கிளறி விடவும்.
  5. அல்வா பதம் வந்ததும் நாம் முதலில் வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பை சேர்த்து நன்றாக கிளறி கடாயை இறக்கி வையுங்கள். அவ்வளவு தான் தித்திக்கும் சுவையில் ஆப்பிள் அல்வா தயாராகிவிட்டது.