தாறுமாறான சுவையில் நெய் பிரியாணி செய்வது எப்படி ?

Summary: இன்று நெய் பிரியாணி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் இப்படி நீங்கள் இந்த முறையில் நெய் பிரியாணி செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்தப் போகி எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள சிரியவர்கள் முதல் பெரியோர்கள் வரை எல்லோரும் இனி இந்த பிரியாணியை அடிக்கடி செய்து தர சொல்லுவார்கள்.

Ingredients:

  • 2 கப் பாஸ்மதி அரிசி
  • 3 பெரிய வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • ½ கப் தேங்காய் பால்
  • 1 கைப்பிடி புதினா
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 tsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 பிரியாணி இலை
  • 3 tbsp எண்ணெய்
  • 2 tbsp நெய்
  • 10 முந்திரி பருப்பு
  • 1 துண்டு பட்டை
  • 2 லவங்கம்
  • 2 ஏலக்காய்
  • 1 வர மிளகாய்
  • 1 tsp மல்லி

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் பெரிய வெங்காயத்தை நீள்வாக்கில் நறுக்கவும், பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும், புதினா மற்றும் கொத்தமல்லி இலையை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை, லவங்கம், ஏலக்காயை, வரமிளகாய் மற்றும் மல்லி சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி நெய் உருகி காய்ந்ததும் அதில் பத்து முந்திரி பருப்புகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
  4. பின் குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும் பிரியாணி இலை, அரைத்த பொடி மற்றும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
  5. பின்பு நீள்வாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் தேவையான அளவு உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை, கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்
  6. நாம் சேர்த்த அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும் தேங்காய்பால் மற்றும் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
  7. பின் பாஸ்மதி அரிசி மற்றும் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடவும். பின் தீயை மிதமாக ஏறிய விட்டு ஒரு பத்து நிமிடங்கள் வேக வைத்து கொள்ளுங்கள். அவ்வளவு சுவையான நெய் பிரியாணி தயார்.