சுவையான பூண்டு உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி ?

Summary: பொதுவாக வீட்டில் கூட்டு, பொரியல் என எது செய்தாலும் குழந்தைகள் ஆக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் வெறுத்து ஒதுக்காமல் சாப்பிடுவது இந்த உருளைக்கிழங்கை மட்டும் தான். ஆனால் இந்த உருளைக்கிழங்கையும் வீட்டில் எப்பொழுதும் ஒரே மாதிரி சமைக்காமல் ஒருமுறை இது போன்று பூண்டு உருளைக்கிழங்கு வறுவல் செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • எண்ணெய்
  • ½ tsp கடுகு
  • ½ tsp உளுந்த பருப்பு
  • ¼ KG உருளைக்கிழங்கு
  • 100 கிராம் பூண்டு
  • 1 tbsp மிளகாய்த் தூள்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் கால் கிலோ உருளைக்கிழங்கை தோல் சீவி எடுத்து கொண்டு பின் பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும் இதனுடன் தோல் உரித்த 100 கிராம் பூண்டையும் பொடிப் பொடியாக நறுக்கிகொள்ளுங்கள்.
  2. பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதல் அரை டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  3. பின் கடுகு பொரிந்துவந்தவுடன் இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் வெங்காயம் நன்கு வதங்கியதும்.
  4. இதுனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு போட்டு வதக்கி கொள்வும். பின்பு உருளைக்கிழங்கு ஒரளவு வெந்தவுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்தூள் மற்றம் தேவையான அளவு உப்புப் போட்டுக் கிளறி விடுங்கள்.
  5. அதன் பின்பு தீயை குறைவாக வைத்து கடாயை மூடி வைத்து பத்து நிமிடங்கள் வேக வைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான பூண்டு உருளைக்கிழங்கு வறுவல் தயார்.