அவுள் இருந்தால் போதும் அடுப்பு இல்லாமல் காலை உணவு செய்வது எப்படி ?

Summary: நம் முன்னோர்கள் வீடுகளில் காலையில் சமையல் செய்யும் பழக்க வழக்கங்களை இருக்காது அதற்கு பதிலாக அடுப்பில்லாமல் செய்யும் சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை தான் சாப்பிடுவார்கள். உதரணமாக காலையில் அனைவரும் பழைய சாதம், கூழ் போன்ற உணவுகளை தான் உண்ணுவார்கள். அதேபோல் இன்றும் அடுப்பில்லாமல் அவலை பயன்படுத்தி காலை உணவு சிறப்பாக செய்யலாம் அப்படி இன்று சுவையான அவல் உருண்டை மற்றும் ரூசியான அவல் தேங்காய் பால் செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 2 கப் அவல்
  • 4 ஏலக்காய்
  • 1 கப் துருவிய தேங்காய்
  • 1 கப் வெல்லம்
  • 1 சிட்டிகை உப்பு
  • 1 கப் அவல்
  • 2 வாழைப்பழம்
  • 2 கப் தேங்காய் பால்
  • 1 கப் சர்கரை
  • 12 உலர் திராட்சை

Equipemnts:

  • 1 பெரிய தட்டு
  • 1 பெரிய பவுள்
  • 3 பவுள்

Steps:

  1. முதலில் அவல் உருண்டை செய்து விடலாம் நாம் எடுத்து வைத்திருக்கும் அவலை ஒரு பெரிய பவுளில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு முறை அலசி தண்ணீரை வடிகட்டியை வைத்து வடிகட்டி அவலை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்
  2. அதன் பிறகு நாம் எடுத்து வைத்திருக்கும் ஏலக்காயை தட்டி பொடியாக ஆக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு பெரிய தாம்பூல தட்டில் அவலை போட்டு அதனுடன் இந்த தட்டிய ஏலக்காயம் சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்து அழுத்தம் கொடுக்காமல் பிசைந்து கொள்ளுங்கள்.
  3. பின்பு இதனுடன் நாம் துருவிய தேங்காய் மற்றும் உடைத்து வைத்திருக்கும் வெல்லம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் அனைத்து பொருட்களும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  4. அதன் பின் இந்த கலவையை தேவையான அளவுக்கு சிறு சிறு உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான அவல் உருண்டை இனிதே தயாராகிவிட்டது.
  5. அவல் தேங்காய்ப்பால் செய்வதற்கு முதலில் ஒரு பெரிய பவுளில் அவுளை எடுத்து தேவையானா அளவு தண்ணீர் ஊற்றி ஒரு முறை நன்றாக அலசி பின் வடிகட்டியை வைத்து வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
  6. அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள வாழைப்பழங்களை சிறிய வட்ட வடிவ துண்டாக வெற்றி அதன் பிறகு நறுக்கிய வாழைப்பழத்தை மசித்து கொள்ளவும்.
  7. பின் இதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலையும் ஊற்றி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  8. அதன் பிறகு நாம் வடிகட்டி வைத்திருக்கும் அவலையும் இதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். பின் சுவைத்து பாருங்கள் இனிப்பு உங்களுக்கு தேவையான அளவு இருக்கிறதா என்று அவ்வளவுதான் சுவையான அவள் தேங்காய் பால் தயாராகிவிட்டது.