தாறுமாறான சென்னை ஸ்பெஷல் வடகறி செய்வது எப்படி ?

Summary: இன்று நாம் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்ற டிபன் வகை உணவுகளுக்கு ஊற்றி சாப்பிடும் வகையில் முக்கியமாக சப்பாத்திக்கு ஊற்றி சாப்பிடும் வகையில் சென்னை ஸ்பெஷல் வடகறி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ஸ்பெஷல் வடகறி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் அடுத்த முறையும் இதை வைக்க சொல்லி உங்களிடம் கேட்பார்கள் அந்த அளவிற்கு இந்த சென்னை ஸ்பெஷல் வடகறி அற்புதமான ஒரு சுவையில் இருக்கும். நீங்கள் எப்பொழுதும் போல் இட்லி தோசைக்கு சாம்பார் வைப்பதுக்கு பதில் இந்த வடகறி செய்து பார்க்கலாம்.

Ingredients:

  • 1 கப் கடலை பருப்பு
  • 3 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 பிரியாணி இலை
  • 1 tsp சோம்பு
  • 6 முந்திரி பருப்பு
  • ¼ கப் துருவிய தேங்காய்
  • ¼  tsp மஞ்சள் தூள்
  • 2 tsp மிளகாய் தூள்
  • எண்ணெய்
  • 3 பச்சை மிளகாய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. கடலைப் பருப்பை மூன்று மணி நேரம் ஊறவையுங்கள். பருப்பு ஊறியதும் சிறிது சோம்பு சேர்த்து அதைத் தண்ணீர் இல்லாமல் நன்றாக வடித்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  2. அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளூ உப்பு சேர்த்து சிறு சிறு பக்கோடாக்களாகப் போட்டு நன்றாக பொரித்து எடுத்து கொள்ளுங்கள்.
  3. ஒரு மிக்ஸி ஜாரில் முந்திரியுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு மற்றும் சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  4. பின் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும். அதில் இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும்.
  5. அதனுடன் அரைத்த முந்திரி – தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்குங்கள். நன்றாக வதங்கியதும் அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்கவிடவும் பின் மல்லித்தழை சேர்த்து, பொரித்த பக்கோடாக்களைப் உதிர்த்து போட்டு தீயை குறைந்து வைத்து 10 நிமிடம் வைக்கவும்.
  6. பின் பத்து நிமிடம் கழித்து மூடியை திறந்து நன்றாக கிளறி விட்டு அனைத்தும் நன்றாகச் சேர்ந்து வந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான வடகறி தயாராகிவிட்டது