தாறுமாறான காய்கறி எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

Summary: இன்று நாம் இப்பொழுது வழக்கமாக வீட்டில் செய்யும் எலுமிச்சை சாதம் செய்யப்போவதில்லை அதற்கு பதிலாக அட்டகாசமான சூவையில் காய்கறி எலுமிச்சை சாதம் செய்து பார்க்கப் போகிறோம். நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த காய்கறி எலூமிச்சை சாதம் செய்து கொடுத்தால் அவர்களுக்கு ஒரு மாறுதலாக இருக்கும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் சுவையும் அந்த அளவிற்கு தாறுமாறாக இருக்கும் அடுத்த முறையும் இது போன்று செய்ய சொல்லி உங்களிடம் கேட்பார்கள்.

Ingredients:

  • 2 கப் பச்சரிசி
  • 2 பழம் எலுமிச்சை
  • 1 கேரட்
  • 10 பீன்ஸ்
  • 1 துண்டு காலிஃபிளவர்
  • ½ கப் பட்டாணி
  • 1 துண்டு இஞ்சி
  • 3 பச்சை மிளகாய்
  • 1 tsp மஞ்சள் தூள்
  • 1 tsp பெருங்காய தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • ½ tsp கடுகு
  • 1 tsp உளுந்த பருப்பு
  • 2 tsp கடலை பருப்பு
  • 10 முந்திரி பருப்பு
  • 3 tbsp எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பெரிய தட்டு

Steps:

  1. முதலில் நாம் எடுத்து கொண்ட அரிசியை இரண்டு மூன்று முறை நன்கு அலசி கொள்ளுங்கள். பின் பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்று அரிசி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து உதிரி உதிரியாக வேக வையுங்கள்.
  2. பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அரை டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் உளுந்து, இரண்டு டீஸ்பூன் கடலைப் பருப்பு, மற்றும் பத்து முந்திரி ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
  3. பின் கடுகு பொரிந்து முந்திரி பருப்பு பொன்னிறாமாக வறுப்பட்டதும். இதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும் பின் காய்கறிகள் ஒரளவு வெந்தவுடன்.
  4. இதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். பின்பு காய்கறிகள் நன்கு வெந்ததும் இதனுடன் எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.
  5. பின்பு நாம் வடித்து வைத்திருக்கும் சாதத்தை ஒரு பெரிய தட்டில் எடுத்து கொண்டு அதில் சாதத்தை சேர்த்து சிறிது சிறிதாக கிரேவியை சேர்த்த நன்கு கிளறி கொள்ளுங்கள். அவ்வளவு தான் காய்கறி எலுமிச்சை சாதம் இனிதே தயாராகிவிட்டது.