சுவையான சேமியா கார பொங்கல் செய்வது எப்படி ?

Summary: உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நீங்கள் இது போன்ற செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த சேமியா கார பொங்கல் அற்புதமான சுவையில் இருக்கும். இந்த ரெசிபி உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு டிபன் ரெசிபியாக மாறிவிடும் அடுத்த முறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள்.

Ingredients:

  • 1 கப் சேமியா
  • ½ கப் பாசி பருப்பு
  • 1 துண்டு பெருங்காயம் கட்டி
  • 100 கிராம் தேவையான அளவு
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • உப்பு
  • தண்ணீர்
  • 1 tbsp நெய்
  • 1 tbsp மிளகு
  • ½ tbsp சீரகம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 25 கிராம் முந்திரி பருப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 தாளிப்பு கரண்டி

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கப் சேமியாவை சேர்த்து வேகவைத்து தனியா எடுத்து கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு அரைகப் பாசிபருப்பை இரண்டு மூன்று முறை நன்கு அலசி கொண்டு பின் பாசிபருப்பை குக்கர் அல்லது காடியில் வேக வைத்து எடுத்துகொள்ளுங்கள்.
  3. பின் ஒரு கடாயை அடுப்பில் அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நாம் வேக வைத்த அரை கப் பாசிபருப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கி கொள்ளவும்.
  4. பின் இதனுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயம், மஞ்சள்தூள், சேர்த்து நன்கு கிளறி விட்டு பின் நாம் வேகவைத்த ஒரு கப் சேமியா சேர்த்து நன்கு கிளறி வதக்கி விடுங்கள்.
  5. பின் அனைத்து பொருட்களும் நன்றாக வெந்ததும் கடாயை கீழ் இறக்கி வைத்து. பின் தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி
  6. அதில் மிளகு சீரகம் துருவிய இஞ்சி மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து சேமியா பொங்கலுடன் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.