நாகர் கோவில் வெள்ளரிக்காய் பச்சடி செய்வது எப்படி ?

Summary: இன்று நாம் நாகர்கோவில் பிரபலமான வெள்ளரிக்காய் பச்சடி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் மிகவும் அருமையான முறையில் செய்யும் இந்த சுவையான வெள்ளரிக்காய் பச்சடியை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சமைத்து கொடுத்தால் பின் அடிக்கடி உங்களை செய்து தர சொல்லி வற்புறத்துவார்கள். அந்த அளவுக்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். இன்று இந்த நாகர்கோவில் வெள்ளரிக்காய் பச்சடி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பு நம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 வெள்ளரிக்காய்
  • ½ கப் துருவிய தேங்காய்
  • 2 துண்டு இஞ்சி
  • 3 பச்சை மிளகாய்
  • ½ tbsp சீரகம்
  • 1 கப் புளிப்பான தயிர்
  • உப்பு
  • 1 tbsp எண்ணெய்
  • ¼ tbsp கடுகு
  • ½ tbsp உளுந்த பருப்பு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை

Equipemnts:

  • 2 கடாய்
  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு பெரிய அளவிலான வெள்ளரிக்காயை எடுத்து அதன் மேற் புற தோல்களை நன்கு சீவிக் கொள்ளுங்கள். அதன் பின்பு வெள்ளரிக்காயை நீள்வாக்கில் பாதியாக வெட்டி அதன் உள்ள விதைகளை நீக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு சிறிய துண்டுகளாக வெள்ளரிக்காயை நறுக்கி நறுக்கிக் கொள்ளவும்.
  2. பின்பு ஒரு குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நாம் நறுக்கிய வெள்ளரிக்காயை சேர்த்து சிறிது அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் துருவிய தேங்காய், இரண்டு துண்டு இஞ்சி, மூன்று பச்சை மிளகாய் மற்றும் அரை டீஸ்பூன் அளவு சீரகம் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு வெள்ளரிக்காய் நன்கு வெந்ததும் அதனுடன் நாம் கெட்டியாக அரைத்த தேங்காய் பேஸ்ட்டையும் சேர்த்து நன்றாக கிளறி விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கப் புளிப்பான தயிர் சேர்த்து நான்கு கிளறி விட்டுக் கொள்ளுங்கள்.
  4. அதன் பின் கடாயை இறக்கி வைத்து விட்டு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான நாகர்கோவில் வெள்ளரிக்காய் பச்சடி இனிதே தயாராகிவிட்டது.