தீபாவளி ஸ்பெஷல் அம்மியில் அரைத்த செய்த நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி ?

Summary: நீங்கள் பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதற்கு பதிலாக நீங்கள் நாட்டு கோழி வாங்கி குழம்பு செய்து சாப்பிட்டால், குழம்பின் சுவை அற்புதமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட அந்த வகையில் நாட்டுக்கோழி குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். இந்த நாட்டுக்கோழி குழம்பை தோசை, இட்லி, சப்பாத்தி, பரோட்டா, போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆதனால் இன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்த்து இந்த வாரம் கடைசியில் இந்த நாட்டு கோழி குழம்பை செய்து சுவைத்து பாருங்கள்.

Ingredients:

  • 4 சில் தேங்காய்
  • 1 tbsp சீரகம்
  • 1 tbsp சோம்பு
  • 1 tbsp மிளகு
  • 10 காய்ந்த மிளகாய்
  • ½ KG நாட்டுக்கோழி
  • 3 tbsp நல்லெண்ணெய்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp கரம் மசலா
  • ½ tbsp மிளகாய்தூள்
  • உப்பு
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் அம்மியில் மசாலா அரைக்க கொடுத்த பொருட்களை அம்மியில் சேர்த்து தேங்காய், சீரகம், சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய் மற்றும் மல்லி சேர்த்து அம்மியில் நன்றாக அரைத்து ஒரு பவுளில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் அம்மி இல்லை என்றால் வழக்கம்போல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் பட்டை, கிராம்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து ஒரு ஐந்து வினாடிகள் வதக்கிக் கொள்ளவும். பின் இரண்டு டீஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  3. பின் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள், வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் நான் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். தக்காளியை சேர்த்த பின் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட்டுக் கொள்ளுங்கள்.
  4. பின் தக்காளி நன்கு வெந்து மசிந்து வந்ததும் நாம் வைத்திருக்கும் நாட்டுக்கோழியை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். நாட்டுக்கோழி கால்வாசி வதங்கியதும் நாம் அம்மியில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் அளவு கரம் மசாலா மற்றும் அரை டீஸ்பூன் அளவு மிளகாய் சேர்த்து கிளறி விட்டுக் கொள்ளுங்கள்.
  5. அதன் பின்பு உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு 15 நிமிடங்கள் குழம்பை நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். நாட்டுக்கோழி வேகுவதற்கு சிறிது தாமதமாகும் ஆகையால் கறி வெந்து விட்டதா என சரி பார்த்து கொள்ளுங்கள்.
  6. பின்பு நாட்டுக்கோழி குழம்பு நன்றாக கொதித்து வந்தவுடன் நாம் வைத்திருக்கும் கொத்தமல்லியை சிறிது தூவி குழம்பை இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான நாட்டுக்கோழி குழம்பு தயார்.