சுட சுட காரசாரமான மசாலா இட்லி செய்வது எப்ப்டி ?

Summary: அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை வெறுப்பவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக புது விதமாக சுவையான இட்லி செய்து சாப்பிடலாம். ஆம், இன்று மசாலா இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். காலை, மாலை நேரங்களில் இந்த இட்லியை செய்து சாப்பிடலாம் அட்டகாசமான சுவையில் இருக்கும். மேலும் இந்தை சுவையான மசாலா இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 9  இட்லி
  • 2 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • ½ tbsp உளுந்த பருப்பு
  • 7 பல் பூண்டு
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 2 தக்காளி
  • 1 tbsp உப்பு
  • ½ tbsp மிளகாய் தூள்
  • ½ tbsp சீரகப் தூள்
  • ¼ tbsp கரம் மசாலா
  • 2 tbsp தக்காளி கெட்சப்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் நாம் எடுத்துக் கொண்ட ஒன்பது இட்லிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பெரிய பவுளில் எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் அங்கு காய்ந்ததும் அதனுடன் கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  2. கடுகு நன்றாக பாெரிந்து வந்ததும் இதனுடன் அரை டீஸ்பூன் சீரகம், 2 கொத்து கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய 7 பல் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள். பூண்டு நன்றாக வதங்கியதும் பின் பொடியாக நறுக்கியஒரு பெரிய வெங்காயம் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பின் வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன். இதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும், பின் ஒரு டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் தக்காளி மென்மையாக வெந்து மசிந்து வந்ததும்.
  4. பின் இதனுடன் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் சீரகப்பொடி, கால் டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நான்கு கிளறி விட்டு வதக்கவும். மசாலா பொருட்கள் நன்றாக வதங்கியதும் இதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு தக்காளி கெட்சப் ஊற்றி வதக்கி கொள்ளுங்கள்.
  5. அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும் நாம் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் இட்லியை சேர்த்து அதன் மேல் ஒரு கைப்பிடி கொத்தமல்லியை தூவி விட்டு இட்லியில் மசாலா படும்படி நன்றாக கிளறி விடுங்கள்.
  6. அதன் பின்பு தீயை அதிகப்படுத்தி இட்லி சூடாகுமாறு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுட சுட மசாலா இட்லி இனிதே தயாராகிவிட்டது.