கல்யாண வீட்டு சுவையில் சௌசௌ கூட்டு செய்வது எப்படி ?

Summary: சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என ஏதாவது கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம். இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த கல்யாண வீட்டு செளசௌகாய் கூட்டு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இருக்கும் பிடிக்கும். நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும்.

Ingredients:

  • 200 கிராம் சௌசௌக்காய்
  • 100 கிராம் பாசி பருப்பு
  • 3 tbsp கடலைபருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • 1 தக்காளி
  • 1 சிட்டிகை பெருங்காய தூள்
  • உப்பு
  • 100 கிராம் துருவிய தேங்காய்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 tsp சீரகம்
  • 2 tbsp எண்ணெய்
  • 1 tsp கடுகு
  • ½ tsp உளுந்த பருப்பு
  • ¼ tsp சீரகம்
  • 3 வர மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் மேலே கொடுத்துள்ள அளவில் கடலைப்பருப்பையும், பாசிப்பருப்பையும் எடுத்து கொண்டு இரண்டு மூன்று முறை தண்ணீர் வைத்து நன்கு அலசி கொள்ளுங்கள்.
  2. பின் இரண்டு பருப்பையும் ஒரு பவுளில் சேர்த்து பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இருபது நிமிடங்கள் நனறாக ஊற வைத்து கொள்ளும். பின் தேங்காய் அரைக்க ஒரு மிக்ஸி ஜாரரை எடுத்து கொண்டு
  3. அதில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் போன்ற பொருட்களை சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்டாக அரைத்து ஒரு பவுளில் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  4. பின் ஊற வைத்த பருப்புகளை தண்ணீர்ரை வடிகட்டி கொண்டு பின்ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து குழையாமல் வேக வைத்து கொள்ளவும்.
  5. பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி , எண்ணய் காய்ந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி வெங்காயம கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் இதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் செளசெள காயை சேர்த்து கிளறி விட்டு வேக வைத்து கொள்ளவும். பின் காய் பாதி வெந்தவுடன் நாம் அரைத்த தேங்காய் விழுது, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு குறைவின தீயில் வேக விடவும்.
  7. பின் தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்துத் நன்றாக தாளித்து செளசெள கூட்டுடன் சேர்த்துக் கிளறி விட்டு கடாயை இறக்கி கொள்ளவும். அவ்வளவு தான் கல்யாண வீட்டு சௌசௌக்காய் கூட்டு தயார்.