மணமணக்கும் சுவையில் ஆட்டுகால் குழம்பு செய்வது எப்படி ?

Summary: இன்று நாம் ஆட்டுக்காலை பயன்படுத்தி காரசாரமான சுவையில் ஆட்டு குழம்பு செய்வது பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். இதுபோன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ஆட்டுக்கால் குழம்பு செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அடுத்து முறையும் உங்களை இது போல செய்துதர சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 2 செட் ஆட்டுக்கால்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • ¼ tbsp கரம் மசாலா
  • 1 tbsp மிளகு தூள்
  • 2 tbsp மல்லி தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • 2 tbsp எண்ணெய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 2 பச்சை மிளகாய்
  • 4 tbsp துருவிய தேங்காய்
  • 8 முந்திரி பருப்பு
  • 2 tbsp மைதா
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் இரண்டு செட் ஆட்டுகால் வாங்கி சுத்தம் துண்டு துண்டாக வெட்டு கொள்ளுங்கள். இல்லை கடையிலே வெட்டி வாங்கி கொள்ளவும். பின் நறுக்கிய ஆட்டுகாலை இரண்டு முறை தண்ணீரில் நன்கு அலசி கொள்ளவும்
  2. பின்பு சுத்தபடுத்திய ஆட்டுகாலை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் மைதாமாவு, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் கலந்து சேர்த்து கலந்து ஒரு மணி நேரங்கள் நன்றாக ஊற வைக்கவும்.
  3. பின்பு ஆட்டுக்காலை குக்கரில் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மிளகு தூள், சீரக தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஆட்டுகால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  4. பின்பு குழம்பு கொதித்து வந்த பின்ப குக்கரை மூடி விட்டு மூன்று விசில் வரும் வரை வேக வையுங்கள். பின்பு தீயை குறைத்து வைத்து கால் மெண்மையாக வேகும் வரை ஒரு மணி நேரங்கள் வரை கூட வேக வைத்து கொள்ளவும்.
  5. பின்பு ஆட்டுகால் நனகு வெந்து வந்ததும் அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் பேஸ்ட் மற்றும் முந்திரிபருப்பு பேஸ்டை சேர்த்து தேங்காய் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வேகவையுங்கள்.
  6. பின்பு மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையை சேர்த்து தாளித்து பின் குழம்புடன் சேர்த்து குழம்பை இறக்கி கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான ஆட்டுகால் குழம்பு தயார்.