கன்னியாகுமரி மீன் பொடிமாஸ் செய்வது எப்படி ?

Summary: மீன் கறி என்று எடுத்துக் கொண்டால் பொதுவாக மீனை வைத்து குழம்பு மற்றும் மீனை பொரித்து வைப்பது இப்படி தான் செய்வோம். இதை தவிர மீனை வைத்து பலவிதமான உணவு பொருட்கள் செய்யலாம் உதாரணமாக மீன் புட்டு செய்யலாம், மீன் பொடிமாஸ் செய்யலாம் இப்படியும் மீன்களை சமைக்கலாம். இன்று உங்களுக்கு மீன் பொடிமாஸ் சுவையாகவும், ரூசியாகவும் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 8 துண்டு மீன்
  • 1 tbsp உப்பு
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • தண்ணீர்
  • 2 tbsp எண்ணெய்
  • ¼ tbsp கடுகு
  • 2 வெங்காயம்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • ½ tbsp மல்லித் தூள்
  • ½ tbsp சீரகத் தூள்
  • 1 tbsp மிளகாய்த்தூள்
  • உப்பு
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 2 கடாய்
  • 1 பெரிய தட்டு
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் உங்களுக்கு விருப்பமான துண்டு மீன்கள் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள். மீன் வாங்கும் பொழுது வெட்டி சுத்தம் செய்து வாங்கிக் கொள்ளுங்கள்.
  2. இப்படி நாம் வாங்கி வைத்துள்ள மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு முறை தண்ணீர் வைத்து நன்றாக அலசிக் கொள்ளுங்கள். பின் மீனை கடாயில் போட்டு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு அனைத்து துண்டுகளும் மேலும் மஞ்சளும், உப்பும் நன்றாக கலந்ததும். மீனை கடாயில் போட்டு மீன் முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கடாயை மூடி வைத்து மீனை நன்றாக கொதிக்க வையுங்கள்.
  4. பின்பு மீன் நன்றாக வெந்ததும் கடாயில் இருந்து மீனை தனியாக வெளியில் எடுத்து. மீனில் உள்ள முல்லை தனியாக எடுத்து சிறு சிறு துண்டுகளாக மீன் கறியை உடைத்து கொள்ளுங்கள்.
  5. பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும். இதனுடன் கடுகையும் சேர்க்கவும், கடுகு பொரிந்து வந்தவுடன் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் கருவேப்பிலை போன்ற அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
  6. அதன் பின் வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வெங்காயம் நன்றாக வதங்கியதும் மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
  7. பின்பு இதனுடன் நாம் உடைத்து வைத்திருக்கும் மீன் கறியையும் சேர்த்து நன்கு கிளறி விடவும் இப்படியே ஒரு மூன்று நிமிடங்கள் நன்றாக கிளறிவிட்டு மீன் வந்ததும் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு 20 வினாடி வதக்கவும். அவ்வளவுதான் சுவையான மீன் பொடிமாஸ் தயாராகி விட்டது.~