மொறு மொறு சோள மாவு தோசை செய்வது எப்படி ?

Summary: இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய சோள மாவு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில் இது போன்று சோள மாவு தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 கப் வெள்ளை சோளம்
  • 1 கப் பச்சரிசி
  • 2 tbsp ஊளுந்த பருப்பு
  • 1 tsp உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் மேலே கொடுத்துள்ள அளவில் வெள்ளைச் சோளம், பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை எடுத்து கொண்டு இரண்டு மூன்று முறை நன்கு அலசி கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு அலசிய பொருட்களை தனிதனியாக ஒரு பவுளில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.
  3. பின் கிரைண்டர் அல்லது மிக்ஸி எடுத்து கொண்டு முதலில் சோளத்தை சேர்த்து அரைத்து கொள்ளவும் பின் பச்சரிசியை அரைத்து கொள்ளவும் பின்பு உளுந்த பருப்பை அரைத்து கொள்ளவும்.
  4. பின் நாம் அரைத்த மூன்று மாவையும் ஒன்றாக கலந்து கொண்டு பின் சிறிது உப்பு சேர்க்கவும். பின் இந்த ஒரு இரவு முழுவதும் புளிக்க வைத்து கொள்ளவும். பின் மறுநாள் மாவை தோசை ஊற்றும் பதத்திற்கு கரைத்து கொள்ளுங்கள்.
  5. பின் வழக்கம் போல் தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் தேய்த்து பின் இரண்டு கரண்டி மாவை ஊற்றி விரித்து விட்டு இருபுறம் வைகவைத்து எடுத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சோள தோசை தயாராகிவிட்டது.