சுவையான தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி ?

Summary: நாம் உணவுகள் சாப்பிடும் போது பொரியல் கூட்டு எதுவும் இல்லாத சமயத்தில் அந்த ஊறுகாயை சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வோம். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதை அரிதான ஒன்றாக மாறி வருகிறது. அந்த வகையில் இன்று நாம் தக்காளி ஊறுகாய் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதில் குறிப்பிட்டுள்ள பொருட்களின் அளவில் இது போன்று நீங்கள் தக்காளி ஊறுகாய் செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். பின் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Ingredients:

  • ½ KG தக்காளி
  • புளி
  • 1 tsp கடுகு
  • ½ tsp பெருங்காய தூள்
  • உப்பு
  • 4 tbsp காஷ்மீர் மிளகாய் தூள்
  • ½ tsp வெந்தய பொடி
  • 1 tsp கடுகு பொடி
  • 1 tbsp வெல்லம்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு காடயை அடுப்பில் வைத்து ஒரு பெரிய எலுமிச்சை அளவு புளியை சேர்த்து தீயை மிதமாக ஏறிய விட்டு ஒரு இரண்டு நிமிடங்கள் வதக்கி புளியை வெளியை எடுத்து குளிர வையுங்கள்.
  2. பின் புளி நன்கு குளிர்ந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பின் அரை கிலோ தக்காளியை தண்ணீர் விடாமல் பேஸ்ட் போல் அரைத்து கொள்ளுங்கள்.
  3. பின் மீன்டும் கடாயை அடுப்பில் வைத்து அதில் எட்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு சேர்க்கவும், பின் கடுகு பொரிந்து வந்தவுடன்.
  4. நாம் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட் மற்றும் புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு 20 நிமிடங்கள் குறைவான தீயில் வேக வைத்து கொள்ளுங்கள். பின் அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு,
  5. நான்கு டீஸ்பூன் காஷ்மீரீ மிளகாய்த்தாள், அரை படிஸ்பள்ளிவெந்தயப் பொடி, ஒரு டீஸ்பூன் கடுகுப் பொடி தக்காளி ஊறுகாய் சனை போகும் வரை நன்கு வதக்கவும். அதன் பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கி, கைபடாமல் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து பதப்படுத்தவும். அவ்வளவு தான் சுவையான தக்காளி ஊறுகாய் தயார்.