சுவையான ரோட்டு கடை சைவ சால்னா செய்வது எப்படி ?

Summary: பரோட்டாவிற்கு ஊற்றி சாப்பிடும் வகையில் ரோட்டுக்கடை சைவ சால்னா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ரோட்டுக்கடை சைவ சால்னா செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் அடுத்த முறையும் இதை வைக்க சொல்லி உங்களிடம் கேட்பார்கள் அந்த அளவிற்கு இந்த ரோட்டு கடை சைவ சால்னா அற்புதமான ஒரு சுவையில் இருக்கும். நீங்கள் எப்பொழுதும் போல் இட்லி தோசைக்கு சாம்பார் வைப்பதுக்கு பதில் இந்த ரோட்டுகடை சைவ சால்னா செய்து பார்க்கலாம்.

Ingredients:

  • 1 பிரியாணி இலை
  •  1 பட்டை
  • 2 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 1 tbsp மல்லி
  • ½ tsp மிளகு
  • ½ tsp சீரகம்
  • 10 சின்ன வெங்காயம்
  • ¼ கப் துருவிய தேங்காய்
  • 1 tsp சோம்பு
  • 1 tsp கசகசா
  • 5 முந்திரி
  • 2 tbsp எண்ணெய்
  • 2 பட்டை
  • 3 கிராம்பு
  • 3 ஏலக்காய்
  • 1 tsp சோம்பு
  • 1 பச்சை மிளகய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 கொத்து கருபே்பிலை
  • 2 தக்காளி
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • 1 tsp மிளகாய் தூள்
  • அரைத்த மசாலா
  • புதினா இலை
  • அரைத்த தேச்காய்
  • ½ tsp கரம் மசாலா
  • உப்பு
  • தண்ணீர்
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் சால்னா செய்வதற்கு தேவையான மசாலா அரைக்க ஒரு மிக்ஸி ஜாரில் பிரியாணி இலை, பட்டை, இஞ்சி, பூண்டு, மல்லி, மிளகு, சீரகம் மற்றும் சின்ன வெங்காயம் போன்ற பொருட்களை சேர்த்து பேஸ்ட் அரைத்து கொண்டு ஒரு பவுளில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு அதை மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம், கசகசா, வறுத்த வேர்க்கடலை, முந்திரி பருப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஆகா அரைத்து இதையும் தனியாக ஒரு பவுளில் வைத்துக் கொள்ளுங்கள்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, போன்ற பொருட்களை சேர்த்து ஒரு ஐந்து வினாடி கிளறி விடவும்.
  4. பின் இதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் கருவேப்பிலை போன்ற பொருட்களை சேர்த்து வதக்கி கொள்ளவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் இதனுடன் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் இதனுடன் மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும். பின் மசாலா வாசனை போனா பின் நம் முதலில் அரைத்து வைத்த வெங்காய பேஸ்ட் மற்றும் சிறிது புதினா இலைகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
  6. பின் மசாலா வாடை போனபின் நாம் அரைத்த தேங்காய் பேஸ்ட், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பின் உப்பு சரிபார்த்து கடாயை மூடி வைத்து ஒரு ஐந்து நிமிடங்கள் வேக வையுங்கள். அவ்வளவு தான் சிறிது சுவையான ரோட்டுக்கடை சைவ சால்னா இனிதே தயார்.