தித்திக்கும் சுவையில் பிரெட் அல்வா செய்வது எப்படி ?

Summary: பொதுவாக இனிப்பு உணவுகளை நாம் கடைகளில் சென்று வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இனிப்பு சாப்பிடுவதற்கு கடைகளில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நாம் நம் வீட்டிலேயே இனிப்பு உணவுகள் செய்து சாப்பிடலாம் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது தித்திக்கும் பிரெட் அல்வா. இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பிரெட் அல்வாவை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாம்பிடுவார்கள்.

Ingredients:

  • 4 துண்டு பிரெட்
  • 10 முந்திரி பருப்பு
  • 5 உலர் திராட்சை
  • எண்ணெய்
  • 4 tbsp நெய்
  • ¼ கப் தண்ணீர்
  • ¾ கப் சர்க்கரை
  • 2 tbsp பால்கோவா
  • 4 tbsp பால்
  • ¼ tsp ஏலக்காய் தூள்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து நெய் உருகியதும் 10 முந்திரி பருப்பு மற்றும் ஐந்து உலர்ந்த திராட்சை சேர்த்து நன்றாக வறுத்து பின் தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு நாம் எடுத்து கொண்ட நான்கு பிரெட்டை துண்டுகளை நறுக்கி கொள்ளவும். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய், இரண்டு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நெய் சேர்க்கவும்.
  3. பின் நெய் உருகி காய்ந்ததும், நாம் நறுக்கிய பிரெட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரிதெடுங்கள். பின் மீண்டும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் முக்கால் கப் அளவு சர்க்கரை மற்றும் கால் கப் தண்ணீர் சேர்க்கவும்.
  4. பின் சர்க்கரை நன்கு கரைந்து கொதித்து வரும் பிறகு முதலில் நாம் பொரித்த பிரெட் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி விடவும். அதன் பின் இதனுடன் கால் கப் அளவு காய்ச்சிய குளிர வைத்த பால் சேர்த்து கிளறி விடவும்.
  5. பின் ஒரு பவுளில் 3 டேபிள்ஸ்பூன் பால்கோவா உடன் 2 டேபிள்ஸ்பூன் சூடான பால் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். பின் கடாயில் இந்த கலவை மற்றும் கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  6. பின் பிரெட் அல்வா கடாயில் ஒட்டாமல் கெட்டியாக அல்வா பதத்திற்கு வந்தவுடன் நாம் முதலில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை சேர்த்து கிளறி விட்டு கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான பிரெட் அல்வா தயார்.