காரசாரமான பன்னீர் குடைமிளகாய் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி ?

Summary: இதுபோல் புதுவிதமாக இந்த பன்னீர் பெப்பர் ஃப்ரை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த பன்னீர் குடைமிளகாய் பெப்பர் ஃப்ரை மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அடுத்த முறையும் இது போல் உங்களை செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள்.

Ingredients:

  • 1 கப் பன்னீர்
  • எண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 குடை மிளகாய்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 3 பச்சை மிளகாய்
  • 2 tsp மிளகு தூள்
  • 1  கொத்து கருவேப்பிலை
  • ½ tsp கடுகு
  • 1 tsp உளுந்தபருப்பு
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து பின் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின் மீன்டும் கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி. பின் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்து கொள்ளவும். பின் இதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
  3. பின் இதனுடன் நாம் முதலில் வறுத்து வைத்திருக்கும் பன்னீர் துண்டுகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கி கொள்ளுங்கள். பின் இதனுடன் இரண்டு டீஸ்பூன் மிளகு தூள் சேர்த்து கிளறி விடவும்.
  4. பின் நாம் சேர்த்த பன்னீர் நன்கு வதங்கியதும் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாயை சேர்த்து ஒரு இரண்டு நிமிடங்கள் வதக்கி கடாயை கிழே இறக்கி வைத்து விடுங்கள்.
  5. பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் நாம் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி பன்னீருடன் சேர்த்து கொள்ளவும் அவ்வளவு தான் காரசாரமான சுவையில் பன்னீர் குடைமிளகாய் பெ்பர் ப்ரை இனிதே தயாராகிவிட்டது.