மென்மையான கைகுத்தல் அரிசி இட்லி செய்வது எப்படி ?

Summary: அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை வெறுப்பவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக புது விதமாக சுவையான இட்லி சாப்பிடலாம். ஆம், இன்று கைகுத்தல் அரிசி இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த கைகுத்தல் அரிசி மென்மையாக மற்றம் மிருதுவாக இருக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் பிடிக்கும். அதனால் இன்று இந்த கைகுத்தல் அரிசி இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 2 ½ கப் கைகுத்தல் அரிசி
  • ½ கப் உளுந்து
  • ½ கப் அவல்
  • உப்பு
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கிரைண்டர்
  • 1 பெரிய பவுள்
  • 1 இட்லி பாத்திரம்

Steps:

  1. முதலில் நாம் எடுத்து கொண்ட இரண்டு அரை கப் கைகுத்தல் அரிசி மற்றும் அரை கப் உளுத்தம் பருப்பை தனிதனியாக இரண்டு மூன்று தண்ணீர் வைத்து நன்கு அலசி கொள்ளுங்கள்.
  2. பின்பு அரிசியிலும், உளுந்த பருப்பிலும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி எட்டு மணி நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் மாவு அரைப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் ஊற வைக்கவும்.
  3. அதன் பின்பு நாம் ஊற வைத்து அரிசியை மீன்டும் ஒரு முறை அலசி தண்ணீரை வடிகட்டி கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு, நன்கு மையாக அரைத்துக் கொண்டு மாவை தோண்டி எடுத்து கொள்ளுங்கள்.
  4. பின் கிரைணடரில் உளுத்தம் பருப்பு மற்றும் அவலை சேர்த்து பின் தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து விட்டு, பின் அரிசி அரைத்த மாவை மீண்டும் இதனுடன் கிரைண்டரில் போட்டு 10 நிமிடம் நன்கு அரைத்து கொள்ளவும்.
  5. பின்பு அரைத்த மாவை 4 மணிநேரங்களன வெதுவெதுப்பான இடத்தில் ஊற வைத்துக் கொண்டு. பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள் பின் வழக்கம் போல் இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுக்க வேண்டும். அவ்வளவு தான் கைகுத்தல் அரிசி இனிதே தயார்