அறுபுதமான சுவையில் கோவக்காய் கிரேவி செய்வது எப்படி ?

Summary: நாம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை அல்லி தரும் கோவக்காயை உணவுடன் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவக்காய் சிறந்த மருந்தாகும் ஆம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதற்கும் உதவியாக இருக்கும். அது மட்டுமில்லாமல் நம் உடம்பில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அழிப்பதன் மூலம் நம் உடலில் வீக்கம் ஏற்பட்ட பகுதிகள், காயம் அடைந்து சரும திசுக்கள் மீண்டும் உருவாக இப்படி பல நன்மைகள் கோவைக்காய் சாப்பிடுவதன் மூலம் நாம் உடலுக்கு கிடைக்கிறது. இந்த கோவைக்காய் கிரேவி அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இந்த கோவக்காய் கிரேவி தாறுமாறாக இருக்கும்.

Ingredients:

  • 250 கிராம் கோவக்காய்
  • 3 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • ½ tbsp சோம்பு
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 2 tbsp மிளகாய் துள்
  • 1 tbsp தனியா தூள்
  • 1 tbsp சீரகத்தூள்
  • 1 tbsp உப்பு
  • தக்காளி பேஸ்ட்
  • ¼ கப் வறுத்த வேர்கடலை
  • 1 tbsp கரம் மசாலா
  • கசூரி மெட்டி
  • 1 கப் தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் 250 கிராம் கோவக்காய் நன்கு தண்ணீரில் சுத்தப்படுத்திக் கொண்டு. அதன் கீழ் பாகம் மற்றும் மேல் பாகத்தை நறுக்கி விட்டு பின் நான்றாக நறுக்கி கொள்ளுங்கள். எப்படியாக மீதம் இருக்கும் கோவக்காயையும் நறுக்கிக் கொள்ளவும்.
  2. அதன் பிறகு கடாயை அடுப்பில் வைத்து மூன்று மேஜை கரண்டி அளவிற்கு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் நாம் நறுக்கி வைத்திருக்கும் கோவக்காயை சேர்த்து ஒரு பத்து நிமிடம் நன்றாக வறுத்து பின் ஒரு பவுளில் தனியா எடுத்து கொள்ளவும்.
  3. அதன் பின்பு அதே கடாயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, போன்ற பொருட்களை சேர்த்து ஐந்து வினாடிகள் வதக்கி விட்டு, இதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள், வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும்.
  4. பின் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி கொள்ளவும், பின்பு இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத் தூள் சேர்த்து நன்கு கிளரி விடுங்கள் மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும்.
  5. நான்கு தக்காளியை பேஸ்ட் போல் அரைத்து கடாயில் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள், பின் தக்காளி பேஸ்ட் நன்கு வதங்கி எண்ணெய் தனியாக பிரிந்து வந்தவுடன் இதனுடன் கால் கப் வறுத்த வேர்க்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்த பொடியை கடாயில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  6. பின் இதனுடன் நாம் வதக்கிய கோவக்காய், ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, கஸ்தூரி மேட்டி மற்றும் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு கடாயை இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான கோவக்காய் கிரேவி தயார்.