சுவையான தள்ளுவண்டி கடை சட்னி செய்வது எப்படி ?

Summary: பொதுவாக நாம் வீடுகளில் இட்லி தோசை செய்யும் பொழுது அதனுடன் வைத்து சாப்பிட அதிகபட்சமாக நாம் செய்யும் சட்னியை தேங்காய் சட்னி தக்காளி சட்னி தான் இந்த இரு சட்னிகளை மட்டுமே ஒரு சுழற்சி முறையில் மாற்றி மாற்றி வைத்து சாப்பிடுவோம். ஆனால் உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி செய்ய விருப்பப்பட்டால். அப்போது நீங்கள் கண்டிப்பாக இந்த தள்ளுவண்டி கடை சட்னியை செய்து பாருங்கள். இது போன்று நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 tbsp எண்ணெய்
  • 5 பச்சை மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 4 tbsp பொட்டு கடலை
  • ½  tsp உப்பு
  • தண்ணீர்
  • 2 tbsp எண்ணெய்
  • 1 tsp கடுகு
  • ½  tsp உளுந்த பருப்பு
  • 1 கொத்து  கருவேப்பிலை
  • 2 வர மிளகாய்
  • 5 சின்ன வெங்காயம்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்தது அதில் கீரிய ஐந்து பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  2. பின் இதனுடன் நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் மற்றும் அரை டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன்.
  3. ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் நான்கு டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் அரைத்த சட்னியை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் சிறு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொண்டு உப்பு சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
  4. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுந்தம் பருப்பு, ஒரு கொத்து கருவேப்பிலை
  5. இரண்டு வரமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய ஐந்து சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின் இந்த தாளிப்பை சட்னியுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும். அவ்வளவு தான் சுவையான தள்ளுவண்டி கடை தண்ணீர் சட்னி தயார்.