தித்திக்கும் சுவையில் சத்துமாவு பர்பி செய்வது எப்படி ?

Summary: நாம் இன்று தித்திக்கும் சுவையுடன் கூடிய சத்துமாவு பர்பி தான் செய்து பார்க்க போகிறோம். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு சத்துமாவை பயன்படுத்தி இந்த சத்துமாவு பர்பி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் வேண்டுமென்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த பர்பி அற்புதமான சுவையில் இருக்கும். நீங்கள் பேக்கரிகளில் ஸ்வீட்ஸ் வாங்கி தருவதற்கு பதிலாக இது போன்ற உங்க வீட்டில் செய்து கொடுக்கலாம்.

Ingredients:

  • 1 கப் சத்து மாவு
  • ½ கப் வெல்லம்
  • 1 ½ கப் கடலை மாவு
  • 1 கப் வெல்லம்
  • ¼ tsp ஏலக்காய் தூள்
  • பிஸ்தா, முந்திரி, பாதம்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 சல்லடை

Steps:

  1. முதலில் நாம் எடுத்துக் கொண்ட ஒரு கப் சத்து மாவை நன்கு சலித்து கொண்டு சலித்த மாவை ஒரு பெரிய பவுளில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் தீயை விதமாக எரிய விட்டு.
  2. பின் நாம் சலித்த சத்துமாவை சேர்த்து அதனுடன் அரைக்கப் அளவிற்கு நெய் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். பின் சத்துமாவு நெய்யில் வறுபட்டு நன்கு வெந்து மனம் வரத் தொடங்கியதும் இதனுடன் முதலில் ஒரு கப் அளவு கடலை மாவு சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறி விடவும்.
  3. பின் இதனுடன் மீண்டும் ஒரு அரை கப் அளவிற்கு கடலை மாவு சேர்த்து கிளறி விடுங்கள். பின் நாம் சேர்த்த மாவு நன்கு வெந்து தண்ணீர் பதத்திற்கு வரும் முறை வதக்கி பின் இதனுடன் ஒரு கப் வெல்லம் சேர்த்து கிளறி விடுங்கள்.
  4. பின் நாம் சேர்த்த வெல்லம் இதனோடு நன்கு கரைந்ததும் கால் டீஸ்பூன் அளவு ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். பின் பர்பி கடாயில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு உருண்டு வந்ததும்.
  5. இந்த நேரத்தில் ஒரு பெரிய தட்டில் எண்ணெய் தடவி அதில் நாம் தயார் செய்த பர்பியை சேர்த்து அதன் மேல் சிறிது உடைத்த முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு போன்றவை சேர்த்து பத்து நிமிடம் குளிர வையுங்கள்.
  6. பின் பர்பி குளிர்ந்து கெட்டியான பதத்திற்கு உங்களுக்கு வேண்டுமென்ற வடிவத்தில் துண்டு துண்டாக நறுக்கி சாப்பிட பரிமாறுகள் அவ்வளவு தான் சுவையான சத்து மாவு பர்பி இனிதே தயாராகி விட்டது.