சுவையான மங்களூர் இஞ்சி சட்னி செய்வது எப்படி ?

Summary: உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி செய்ய விருப்பப்பட்டால். அப்போது நீங்கள் கண்டிப்பாக இந்த மங்களூர் இஞ்சி சட்னியை செய்து பாருங்கள். இது போன்ற நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த மங்களூர் இஞ்சி சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 2 tbsp எண்ணெய்
  • 2 tbsp கருப்பு உளுந்து
  • 1 tbsp மல்லி
  • 1 tbsp சீரகம்
  • 1 கைப்பிடி இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • ¼ tsp வெந்தயம்
  • 10 வர மிளகாய்
  • 1 tsp வெல்லம்
  • 1  tbsp புளி கரைசல்
  • உப்பு
  • 1 tbsp எண்ணெய்
  • 1 tsp கடுகு உளுந்த பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 வர மிளகாய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் இரண்டு டேபிள் ஸ்பூன் கருப்பு உளுந்து, ஒரு டேபிள் ஸ்பூன் மல்லி, ஒரு டீஸ்பூன் சீரகம் போன்ற பொருட்களை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள்.
  2. பின் இதனுடன் ஒரு கைப்பிடி பொடியாக நறுக்கிய இஞ்சி, ஐந்து பல் பூண்டு, கால் டீஸ்பூன் வெந்தயம் போன்ற பொருட்களை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பின் இஞ்சி நன்றாக வெந்ததும்.
  3. இதனுடன் 10 வர மிளகாய் சேர்த்து வரமிளகாய் சிவக்கும் வரை நன்றாக வறுத்து எடுத்துக். பின் கடாயை கீழ் இறக்கி நன்கு குளிர வைத்துக் கொள்ளுங்கள். பின் குளிர வைத்த பொருள்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து.
  4. பின் இதனுடன் ஒரு டீஸ்பூன் வெல்லம், ஒரு டேபிள் ஸ்பூன் புளி கரைசல், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதாக தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். பின் கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி.
  5. அதில் கடுகு உளுந்தம் பருப்பு, ஒரு கொத்து கருவேப்பிலை, இரண்டு வரமிளகாய் சேர்த்து தாளித்து. நாம் அரைத்த இஞ்சி சட்னியை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்கி கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான மங்களூர் இஞ்சி சட்னி தயாராகிவிட்டது.