ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் வறுவல் செய்வது எப்படி ?

Summary: நீங்கள் இது போல் ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைலில் பாகற்காய் வறுவலை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். யாருமே வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு இந்த பாகற்காய் வறுவல் அட்டகாசமான சூவையில் இருக்கும். உங்கள் வீட்டில் பாகற்காயை வெறுத்து ஒதுக்குபவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்த ரெசிபியாக இது மாதிரி போகும்.

Ingredients:

  • 10 பல் பூண்டு
  • 1 tsp சீரகம்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • ½ tsp உப்பு
  • 2 tbsp எண்ணெய்
  • 1 tsp கடலை பருப்பு
  • 1 tsp உளுந்த பருப்பு
  • ½ tsp சீரகம்
  • 2 வர மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • ½ KG பாகற்காய்
  • அரைத்த பேஸ்ட்
  • உப்பு
  • 1 tsp எலுமிச்சை சாறு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் எடுத்துக் கொண்ட பாகற்காயை நன்கு தண்ணீரில் சுத்தப்படுத்தி கொண்டு பின் பொடி பொடி துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பின் ஒரு மிக்ஸி ஜாரில் 10 பல் பூண்டு, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு, அரை டீஸ்பூன் சீரகம் இரண்டு வர மிளகாய் சேர்த்து நன்கு வறுத்த கொள்ளுங்கள்.
  3. பின்பு இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் நாம் பொடியாக நறுக்கிய பாகற்காயை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
  4. பின் பாகற்காய் நன்கு வதங்கி வெந்து வந்ததும் நாம் மிக்ஸியில் அரைத்த பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு கடாயை மூடி வைத்து ஒரு ஐந்து நிமிடங்கள் வேக வையுங்கள்.
  5. பின் ஐந்து நிமிடம் கழித்து சிறிது கருவேப்பிலை இலைகளை தூவி, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி கடாயை இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் வறுவல் இனிதே தயாராகிவிட்டது.