மதுரை மட்டன் வறுவல் | mutton fry

Summary: பொதுவாக நம் வீட்டில் மட்டன் பயன்படுத்தி உணவு தயாரிப்பது என்றால் மட்டன் குழம்பு மற்றும் மட்டன் கிரேவி என அதிகபட்சமாக இந்த இரு வகையிலான மட்டன் ரெசிபியை தான் தயார் செய்து பரிமாறுவோம். இது நமக்கே சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருககும். இனி இந்த கவலை உங்களக்கு வேணடாம். ஆம், இன்று இந்த பதிவில் மட்டன் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்க இருக்கிறோம். அதுவும் தூங்கா நகரம் மதுரையின் மட்டன் வறுவல் பிரபலமானது என்று சொல்லலாம் இன்று மதுரை ஸ்டைலில் மட்டன் வறுவல் செய்வது எப்படி, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 500 KG MUTTON
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 டீஸ்பூன் தனியா தூள்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • ½ கப் கொத்த மல்லி
  • ¼ கப் புதினா இலை
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 4  காய்ந்த மிளகாய்
  • 2 தூண்டு இஞ்சி
  • ¼ கப் தேங்காய் விழுது
  • 1 டீஸ்பூன் கரம் மசலா
  • கருவேப்பிலை

Equipemnts:

  • 1 குக்கர்
  • 2 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் மட்டனை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு முறை தண்ணீர் வைத்து நன்றாக அலசி எடுத்துக் கொள்ளுங்கள். கறித்துண்டு பெரிய பெரிய துண்டுகளாக இருந்தால் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
  2. பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியவுடன் வெங்காயம், தனியா தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து சற்று வதக்கி கொள்ளுங்கள்.
  3. பின்பு இதனுடன் மட்டனை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். ஒரு விசில் வரும் வரை வேக வைத்தால் போதுமானதாக இருக்கும். பின்பு குக்கரின் பிரஷர்ரை இறக்கி மூடியை திறந்து கொள்ளுங்கள்.
  4. அதன் பின்பு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி என்னை சூடேறியவுடன் சோம்பு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக தாளிக்கவும்.
  5. தாளித்த பின் வேக வைத்த மட்டனை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைக்கவும் தண்ணீர் வற்றிய உடன் தேங்காய் விழுதை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
  6. பின்பு கரம் மசாலா தூள் தூவி நன்கு கிண்டி விடவும் 2 நிமிடங்கள் நன்றாகவே வேக வைத்து கொள்ளுங்கள். இப்போது கடாயை இறக்கி விடுங்கள் பொழுது சுவையான மதுரை மட்டன் வறுவல் இனிதே தயாராகிவிட்டது.