காரசாரமான வறுத்து அரைத்த கோழி குழம்பு செய்வது எப்படி ?

Summary: நீங்கள் சிக்கன் வாங்கி எப்பொழுது ஒரே மாதிரியான வகையில் குழம்பு, கிரேவி என வைத்து சாப்பிடுவதற்கு பதில் ஒரு முறை இந்த வறுத்து அரைத்த கோழி குழம்பு செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அட்டகாசமான சுவையில் இது இருக்கும் அடுத்த முறையும் உங்களை இது போல் வைக்க சொல்லி தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்த ஒரு சிக்கன் ரெசிபியாக மாறிப்போகும்.

Ingredients:

  • 3 tbsp மல்லி
  • 20 வர மிளகாய்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 tsp சீரகம்
  • ½ tsp சோம்பு
  • ½ tsp உப்பு
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • 3 tbsp எண்ணெய்
  • 10 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 250 கிராம் சின்ன வெங்காயம்
  • 3 tbsp எண்ணெய்
  • வறுத்து அரைத்த பொடி
  • ½ KG சிக்கன்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • ½ கப் தயிர்
  • 2 டம்பளர் தண்ணீர்
  • உப்பு
  • ¼ கப் தேங்காய் பேஸ்ட்
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • பெரிய பவுள்

Steps:

  1. முதலில் பொடி அரைக்க ஒரு கடாயில் மல்லி, விதைகள் நீக்கிய வர மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து எண்ணெய் இல்லாமல் வறுக்கும். பின் பொருட்கள் நன்கு வறுப்பட்டு வந்ததும் ஒரு அகல பாத்திரத்தில் சேர்த்து குளிர வைத்து பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பூண்டு பற்கள், இஞ்சி துண்டு மற்றும் தோல் உரித்த சின்ன வெங்காயம் ஆகியவை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பின் வதக்கிய பொருட்களை குளிர வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் நாம் வறுத்து வைத்த பொடியை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். பின் இதனுடன் நாம் சுத்தப்படுத்தி வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள்.
  4. பின் சிக்கன் நிறம் மாறத் தொடங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் வெங்காய பேஸ்ட் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பின் இதனுடன் அரை கப் அளவிற்கு புளிக்காத தயிர் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
  5. பின் சிக்கன் ஓரளவு வதங்கியதும் இதனுடன் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைத்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும். இந்த சமயத்தில் துருவிய தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள்.
  6. பின் இரண்டு விசில் வந்தது பிரஷர் ரிலீஸ் செய்து மூடியை திறந்து மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து நாம் அரைத்த தேங்காய் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள் பின்பு கடைசியாக சிறிது கொத்தமல்லி தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் வறுத்த அரைத்த கோழி குழம்பு தயார்.