சுடான சாதத்துடன் சாப்பிட கருவேப்பிலை குழம்பு செய்வது எப்படி ?

Summary: நீங்கள் உங்கள் வீட்டில் இது போன்ற ஒரு முறை இந்த கருவேப்பிலை குழம்பு செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இந்த குழம்பு இருக்கும். அடுத்த முறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி கேட்பார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த கருவேப்பிலை குழம்பு செய்து நாம் சாப்பிடுவதன் மூலம் தலை முடி பிரச்சனைகள் மற்றும் ரத்தம் குறைவாக சுரக்கும் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

Ingredients:

  • 3 கைப்பிடி காய்ந்த கருவேப்பிலை
  • 1 டம்பளர் புளி கரைசல்
  • 2 tbsp எண்ணெய்
  • 1 tsp சீரகம்
  • 1 tsp கடுகு உளுந்த பருப்பு
  • 1 tsp வெந்தயம்
  • 10 பல் பூண்டு
  • 12 சின்ன வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1 tsp மிளகாய் தூள்
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • 2 tsp மல்லி தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு
  • ½ tsp வெல்லம்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. கருவேப்பிலை குழம்பு செய்ய முதலில் ஒரு மூன்று கைப்பிடி அளவு கருவேப்பிலையை வெயிலில் காய வைத்து நன்கு உலர்த்தி கொள்ளுங்கள். பின்பு உலர்த்திய கருவேப்பிலையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின் ஒரு டம்ளர் அளவிலான தண்ணீரில் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை பத்து நிமிடம் ஊற வைத்து. பின் திக்காக கரைத்து புளி கரைசல் தயார் செய்து வைத்து கொள்ளுங்கள்.
  3. பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு, சீரகம், வெந்தயம் போன்ற பொருட்களை சேர்க்கவும். பின் கடுகு நன்கு பொரிந்தவுடன்.
  4. பின்பு இதனுடன் பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும். பின் பூண்டு பற்கள் நன்கு வதங்கியதும். நாம் தோலுரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயங்களை சேர்த்து வதக்கவும்.
  5. பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன், நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் இந்த தக்காளியும் நன்கு மசிந்து வந்ததும். இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
  6. பின் மசாலா வாசனை போனபின் நம் பொடியாக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை பொடி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பின்பு நாம் கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை சேர்த்து
  7. பிறகு தேவையான அளவு உப்பு, வெல்லம் மற்றும் ஒரு கொத்து பிரெஷ்ஷான கருவேப்பிலை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான கருவேப்பிலை குழம்பு இனிதே தயாராகிவிட்டது.