பாரம்பரிய பச்சை புளி ரசம் செய்வது எப்படி ?

Summary: கடினமான உணவுகளை சாப்பிட்ட பிறகு ரசம் ஊற்றி சாப்பிடும் பொழுது நமது வயிற்றுப் பகுதியில் நடைபெறும் செரிமான வேலை மிக எளிதில் முடிவடையும். செரிமான வேயையை எளிதாக்கும் சக்தி ரசத்திற்கு உண்டு. அதிலும் நாம் சாப்பிடும் ரசம் பல வகைகளில் தயார் செய்வார்கள், ஆனால் இன்று நாம் பாரம்பரிய முறைப்படி அடுப்பில்லாமல் பச்சைப்புளி ரசம் எப்படி செய்வது என்று தான் பார்க்க இருக்கிறோம். பொதுவா ரசம் அடுப்பில் வைத்து செய்வார்கள், இன்று அடுப்பில் வைக்காமல் மிகவும் சுவையான ரசம் செய்து பார்க்க போகிறோம்.

Ingredients:

  • 15 சின்ன வெங்காயம்
  • 4 பல் பூண்டு
  • 3 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கொத்து கொத்தமல்லி
  • 1 tbsp மிளகு
  • 1 tbsp சீரகம்
  • புளி
  • உப்பு
  • 1 கப் தண்ணீர்

Equipemnts:

  • 1 குழம்பு பாத்திரம்

Steps:

  1. முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் 15 நறுக்கிய சின்ன வெங்காய்ம், நான்கு பல் நறுக்கிய பூண்டு, நறுக்கிய மூன்று பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றில் ஒரு கொத்து நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  2. பின் ஒரு டீஸ்பூன் அளவு சீரகம் மற்றும் ஒரு டீஸ்பூன் அளவு மிளகு இந்த இரண்டு பொருட்களையும் எடுத்து ஒன்றாக சேர்த்து இடித்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு ஒரு பாத்திரத்தில் ஒரு எலுமிச்சை அளவு புளியை 15 நிமிடங்கள் ஊறவைத்து, பின் ஊற வைத்த புளியை கரைத்து புளி கரைசல் தயார் செய்து கொள்ளவும்.
  4. பின்பு நாம் தயார் செய்த புளி கரைசலை வடிகட்டி அகல பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும். பின்பு ரசத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து உங்களுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  5. பின் கைகளால் ஒரு முறை ரசத்தில் நாம் சேர்த்த மிளகாய் கொத்தமல்லி இலைகள் போன்றவற்றை பிசைந்து விடவும் அவ்வளவுதான் நமது பாரம்பரிய பச்சைப்புளி ரசம் இனிதே தயாராகிவிட்டது.