சுவையான வெங்காய் பொடி தோசை, தக்காளி கடையல் சட்னி செய்வது எப்படி ?

Summary: வழக்கமான முறையில் நீங்கள் டிபன் உணவுகளை செய்து சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு முறை சற்று வித்தியாசமாக இதுபோன்று செய்து பாருங்கள் இந்த தோசை வகை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் சுவைக்கும் பஞ்சம் இருக்காது. ஆம் இன்று சின்ன வெங்காயம் பொடி தோசையும் மற்றும் அதன் உடன் வைத்து சாப்பிட தக்காளி கடையல் சட்னியும் செய்து பார்க்க போகிறோம் இரண்டையும் நீங்கள் வைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை அட்டகாசமாக இருக்கும் செல்வதற்கு வார்த்தைகளே இல்லை.

Ingredients:

  • 2 மேசை கரண்டி எண்ணெய்
  • ½ tbsp சீரகம்
  • ½ tbsp மல்லி
  • 5 பச்சை மிளகாய்
  • 15 சின்ன வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 உருளைக்கிழங்கு
  • 5 தக்காளி
  • தண்ணீர்
  • உப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 பெரிய பவுள் தோசை மாவு
  • 20 சின்ன வெங்காயம்
  • 1 முட்டை
  • 1 கப் இட்லி பொடி
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் சட்னி செய்து விடலாம் ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு மேசை கரண்டி எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் எண்ணெய் காய்ந்ததும் அரை டீஸ்பூன் சீரகம் மற்றும் அரை டீஸ்பூன் மல்லி சேர்த்து தாளிக்கவும்.
  2. அதன் பின் நாம் தோல் உரித்து வைத்திருக்கும் 15 சின்ன வெங்காயம், ஐந்து பச்சை மிளகாய் மற்றும் இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி விட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
  3. பின் சின்ன வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் நான் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் ஐந்து தக்காளியை சேர்த்து ஒரு முறை நன்றாக கிளறி விட்டு வதக்கிக் கொள்ளவும்.
  4. அதன் பின்பு கடாயில் தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட்டு ஒரு நிமிடம் கழித்து ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லியை சேர்த்து கடாயை மூடி ஒரு பத்து நிமிடங்கள் நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  5. பின் 10 நிமிடம் கழித்து உருளைக்கிழங்கு நன்றாக வெந்து வந்து தக்காளியும் வெந்து வரும் சமயத்தில் கடாயை கீழே இறக்கி குளிர வைத்துக் கொள்ளுங்கள். பின்பு பருப்பு மத்து வைத்து நன்றாக கடைந்து விடுங்கள் அவ்வளவுதான் சுவையான தக்காளி கடையல் சட்னி தயாராகிவிட்டது.
  6. ஒரு பெரிய பவுள் அளவில் தோசை மாவை எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு முட்டை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி கொள்ளுங்கள். பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து கொள்ளவும்.
  7. கல் சூடேறியதும் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் கொண்டு இட்லி வடிவத்திற்கு அடை போன்று தோசை ஊற்றிக் கொண்டு பின் நறுக்கிய வெங்காயத்தை சிறிது தோசை மீது தூவி விடவும்.
  8. அதன் மேல் நாம் வைத்திருக்கும் இட்லி பொடியை தோசை முழுவதும் மலை சாரல் போல் நன்றாக தூவி விடுங்கள் பின் தோசையின் அடிப்பகுதி நன்றாக வெந்தவுடன் திருப்பி போட்டு விடுங்கள்.
  9. தோசை இருபுறமும் நன்றாக பொன்னிறமாக வந்தவுடன் தோசை எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான சின்ன வெங்காய பொடி தோசையும் மற்றும் சுவையான தக்காளி கடாயில் சட்னியும் தயாராகிவிட்டது.