மணமணக்கும் வாழைக்காய் குழம்பு செய்வது எப்படி ?

Summary: மதியம் சுட சுட சாதத்துடன் இந்த வாழைக்காய் குழம்பு ஊற்றி சாப்பிட்டால் அதன் சுவை அற்புதமாக இருக்கும். இதோட நீங்கள் வைத்து சாப்பிடுவதற்கு, கூட்டு, பொறியல் என எதுவும் தேவையில்லை அப்பளத்தை பொரித்து மதிய உணவை நீங்கள் நிறைவாக சாப்பிட்டு முடிக்கலாம். இது போன்ற நீங்களும் ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த வாழைக்காய் குழம்பு செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமாக இருக்கும் அடுத்த முறையும் உங்களை இது போல் செய்து தர சொல்லி கேட்பார்கள்.

Ingredients:

  • 2 வாழைக்காய்
  • 2 tbsp எண்ணெய்
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • 1 tsp மிளகாய் தூள்
  • ½ tsp உப்பு
  • 1 வெங்காயம்
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 2 தக்காளி
  • 3 tbsp துருவிய தேங்காய்
  • ½ tsp சோம்பு
  • 7 முந்திரி பருப்பு
  • 3 tbsp எண்ணெய்
  • ½ tsp கடுகு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 4 சின்ன வெங்காயம்
  • 1 tsp சீரகத்தூள்
  • 2 tsp மல்லி தூள்
  • 3 tsp மிளகாய் தூள்
  • அரைத்த வெங்காயம் தக்காளி
  • 1 கப் புளி கரைசல்
  • அரைத்த தேங்காய்
  • ரோஸ்ட் செய்த வாழைக்காய்
  • உப்பு
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் வைத்திருக்கும் வாழைக்காய் தோல்களை சீவி எடுத்து விட்டு சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின் நறுக்கிய வாழைக்காய் துண்டுகளை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து பிரட்டி கொள்ளுங்கள்.
  2. பின்பு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் இந்த மசாலா தடவிய வாழைக்காய் சேர்த்து நன்கு ரோஸ்ட் ஆக செய்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றவும்.
  3. பின் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பின் வெங்காயம் நன்கு வதங்கியதும் இதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்
  4. பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் கடாயை இறக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்துக் கொள்ளவும்.
  5. பின் கடுகு நன்கு பொரிந்து வந்தவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இதனுடன் சீரகத்தூள், மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
  6. பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் நாம் வதக்கி அரைத்த மசாலாவையும் இதனோடு சேர்த்து ஒரு பத்து நிமிடங்கள் நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள். பின் இந்த நேரத்தில் சிறிது புளியை ஊறவைத்து புளி கரைசல் தயார் செய்து கொள்ளுங்கள்.
  7. பின் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், முந்திரி பருப்பு, சோம்பு மற்றும் சிறிய தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து சொள்ளுங்கள். பின் 10 நிமிடம் கழித்து கடையில் புளி கரைசல் மற்றும் அரைத்த தேங்காய் சேர்த்து மறுபடியும் 10 நிமிடம் கடாயை மூடி வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  8. பின் நாம் ரோஸ்ட் செய்த வாழைக்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான வாழைக்காய் குழம்பு இனிதே தயாராகிவிட்டது.