மதிய உணவுக்கு ஏற்ற காளான் மிளகு வறுவல் செய்வது எப்படி ?

Summary: நீங்கள் காளாணை வைத்து வழக்கமாக செய்யும் கூட்டு கிரேவிக்கு பதிலாக இந்த காளான் மிளகு வறுவலை ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த காளான் ரெசிபியாக மாறிவிடும். அடுத்த முறையும் இது போல் உங்களை செய்து தர சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 2 மேசை கரண்டி எண்ணெய்
  • 6 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 குடை மிளகாய்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 2 பெரிய வெங்காயம்
  • 1  tbsp மிளகு தூள்
  • ½ tbsp சிக்கன் மசாலா
  • ½ tbsp சீரகத்தூள்
  • 2 tbsp சோயா சாஸ்
  • ¼ கப் தண்ணீர்
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் எடுத்துக் கொண்ட காளான்களை நன்கு கழுவி சுத்தப்படுத்திக் கொண்டு இரண்டு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பின்பு ஒரு பவுளில் மைதா மாவு, சோள மாவு, உப்பு, மிளகு பொடி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு போல் கரைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின் நாம் நறுக்கிய காளான்களை இதனுடன் சேர்த்து நன்கு பிரட்டி எடுத்து ஒரு ஐந்து நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும்.
  3. பின் நாம் மாவில் பிரட்டி எடுத்த காளான்களை சேர்த்து நன்கு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும்
  4. பின் பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கவும். பின் நாம் சேர்த்த குடைமிளகாய் நன்கு வதக்கியதும்.
  5. பின்பு இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வாங்கி வந்தவுடன் இதனுடன் மிளகுத்தூள், சிக்கன் மசாலா, சீரகத்தூள் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
  6. பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கி வந்ததும் கால் கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு வதக்கி விடுங்கள். பின்பு நாம் பொரித்து எடுத்த காளானை இதனுடன் சேர்த்து ஒரு பத்து நிமிடங்கள் நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
  7. பின் கடைசியாக அரை டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் சிறிது அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் காரசாரமான சுவையில் காளான் மிளகு வறுவல் இனிதே தயாராகிவிட்டது.