புதுவிதமான சுவையில் வாழைம்பழ இட்லி செய்வது எப்படி ?

Summary: பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் அதிகபட்ச உணவு பொருள் என்றால் அது இட்லி தான் இருந்தாலும். ஒரு மாறுதலுக்காக புது விதமான சுவையில் இட்லி செய்து சாப்பிடலாம். ஆம், இன்று வாழைப்பழ இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். காலை நேரங்களில் திடீரென்று இட்லி செய்ய வேண்டும் என்றால் மாவுல்லாமல் தவிக்காதீர்கள் உடனடியாக இந்த வாழைப்பழ இட்லியை செய்து அசத்துங்கள்.

Ingredients:

  • 4 வாழைப்பழம்
  • 1 கப் ரவை
  • ¼ கப் துருவிய தேங்காய்
  • ½ கப் வெல்லம்
  • ½ tbsp பேக்கிங் சோடா
  • 1 சிட்டிகை உப்பு
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் எடுத்து கொண்ட வாழைப்பழங்களை தோல் உரித்து நன்கு மசித்து கொள்ளவும். பின் நாம் மசித்த வாழைப்பழத்தை ஒரு பெரிய பவுளில் சேர்த்து கொள்ளவும்.
  2. பின் இதனுடன் நாம் வைத்திருக்கும் ஒரு கப் ரவை, கால் கப் துருவிய தேங்காய், ஒரு சிட்டிகை உப்பு, அரை கப் வெல்லம் மற்றும் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா என அனைத்தையும் சேர்த்து கொள்ளவும்.
  3. பின் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். பின் பவுளை மூடி வைத்து 20 நிமடங்கள் நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். பின் இட்லி மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளுங்கள்.
  4. பின் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் கொதித்து வந்ததும் இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவை இட்லி குழியில் ஊற்றி மூடி வைத்து 15 நிமிடங்கள் அவித்து எடுத்து கொள்ளுங்கள். அவவளவு தான் சுவையான வாழைப்பழ இட்லி இனிதே தயாராகிவிட்டது.